வெளியிடப்பட்ட நேரம்: 03:08 (11/11/2018)

கடைசி தொடர்பு:03:08 (11/11/2018)

ஜோதிகாவின் ’ஜிமிக்கி கம்மல்’ டான்ஸ் - 'ஷெரில் வெர்ஷனை மிஞ்சுமா?

ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’ஜிமிக்கி கம்மல்’ ஜோதிகா வெர்ஷனை காண ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

ஜிமிக்கி கம்மல்

வித்யாபாலன் நடிப்பில் துமாரி சுலு என்ற திரைப்படம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. வித்யாபாலன் நடித்த கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடிக்க, தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராகவும் நடிகர் சிம்பு ஹெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார்.  இந்தப்படம் வருகிற 16-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. 

ஜோதிகா

ஓணம் கொண்டாட்டத்தின்போது 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாளப்படத்தின் பாடலுக்கு ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய  'ஜிமிக்கி கம்மல்'  பாடல் கேரளா மற்றும் தமிழகத்தில் வைரலானது. பல தரப்பினரும் நடனமாடி, தொடர்ந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவந்தனர். இந்த பாடல்  காற்றின் மொழி படத்திலும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அந்த பாடலுக்கு ஜோதிகா நடனமாடுவது போல படங்கள் வெளியாகியுள்ளது. அதில், 'இந்த பாடல்  நாளை (12-ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ’ஜிமிக்கி கம்மல்’ ஜோதிகா வெர்ஷனை காண ஆவலுடன் காத்திருப்பதாக கருத்துகளைப் பகிர்ந்துவருவதுடன் ஹேஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க