Published:Updated:

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் 60 ஆக குறைப்பு: மே 1 முதல் அமல்

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள்  60 ஆக குறைப்பு: மே 1 முதல் அமல்
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் 60 ஆக குறைப்பு: மே 1 முதல் அமல்
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள்  60 ஆக குறைப்பு: மே 1 முதல் அமல்

புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் 60 ஆக குறைத்து ரயில்வே அமைச்சக நடவடிக்கை எடுத்துள்ளது. இது மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரயிலில் பயணம் செய்வதற்கு 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்த வசதியை மாற்றி அமைக்க ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.

அந்த வகையில் இந்த முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து சரிபாதியாக 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. இந்த 60 நாட்கள் முன்பதிவு காலத்தில், முன்பதிவு செய்கிற நாளும், பயண நாளும் சேராது. இது மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும் 120 நாட்கள் முன்பதிவு காலம் அமலில் இருந்த காலம் வரை (அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி வரை) செய்த முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், 60 நாட்கள் முன்பதிவு காலத்தை தாண்டி செய்த முன்பதிவுகள் ரத்து செய்யவும் அனுமதிக்கப்படும்.

##~~##
தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு கால வரையறையில் மாற்றம் இல்லை. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முன்பதிவு காலம் 360 நாட்கள் என்பதிலும் மாற்றம் கிடையாது என்று ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.