Published:Updated:

`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்!’ - பூரிப்பில் 43 வயது பெண்

`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்!’ - பூரிப்பில் 43 வயது பெண்
`3 குழந்தைதான் பிளான்; ஆனால் 21 பிள்ளைகளைப் பெற்றுவிட்டோம்!’ - பூரிப்பில் 43 வயது பெண்

லண்டனில் 43 வயது பெண்மணி ஒருவர் 21 குழந்தைகளைப் பெற்றுள்ளார். 

நம்முடைய பாட்டி தாத்தா காலத்தில் ஒவ்வொருவரும் 6, 7 குழந்தைகள் பெற்று வளர்த்ததைக் கேள்விப்பட்டிருப்போம். பெருகி வரும் மக்கள் தொகையை அடுத்து குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்ப தம்பதியினரும் 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த நவீன யுகத்திலும் ஒரு தம்பதி 20 குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர்கள் சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதி. இவர்கள்தாம் இதுவரை 20 குழந்தைகளைப் பெற்றுள்ளனர். தற்போது 21வது குழந்தையை இவர்கள் வரவேற்றுள்ளனர். ஆம், இரண்டு நாள்களுக்கு முன் 21வதாகப் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார் சூ ராட்ஃபோர்ட். போனி ராய் என அப்பெண் குழந்தைக்குப் பெயரிட்டுள்ள தம்பதி, `எல்லோரையும் போலவே முதலில் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே எண்ணினோம்" எனக் கூறியுள்ளனர். 

தனது 14 வயதில் முதல் குழந்தைக்காக கர்ப்பம் தரித்த சூ ராட்ஃபோர்ட் 43 வயதில் தற்போது 21வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.  21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. ``இவை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும். அதனால் இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர்" எனக் கூறியுள்ளார் சூ ராட்ஃபோர்ட்.