`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone | Game of thrones season 8 to release on april 2019

வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (13/11/2018)

கடைசி தொடர்பு:07:18 (14/11/2018)

`ஏப்ரல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!’ - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ குறித்து அதிகாரபூர்வ வீடியோ #ForTheThrone

உலக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிவி தொடரான `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் கடைசி சீஸனான எட்டாவது சீஸன் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது HBO நிறுவனம். ஏப்ரல் மாதத்தில்தான் ரிலீஸ் இருக்கும் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்திருந்தாலும் இன்றுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் ட்விட்டர் பக்கத்தில் #ForTheThrone என்ற ஹேஷ்டேக்குடன்கூடிய கடந்த சீஸன் புகைப்படங்கள் சிலவற்றுடன் இதை HBO அறிவித்திருக்கிறது.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'

கடந்த சீஸனைப்போலவே இந்த சீஸனில் சாதாரணமாக இருக்கும் 10 எபிசோட்கள் இருக்காது. 6 எபிசோட்கள் மட்டுமே இருக்கும். ஆனால், அனைத்தும் முன்பைவிட நீளமாக இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஒரு மணிநேரத்தில் இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்த ஹாட்ஸ்டார் நிறுவனம்தான் இம்முறையும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரை இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 7 சீஸன்களை மீண்டும் பார்க்க நினைப்பவர்களும் ஹாட்ஸ்டார்க்குச் செல்லலாம்.

எப்போதும் வெளிவருவதற்கு முன்பே லீக் ஆகிவிடுவதும் இந்தத் தொடருக்கு வழக்கமாகிவிட்டது. 7-வது சீஸனில்கூட 2 எபிசோட்கள் லீக் ஆனது. இம்முறையாவது லீக் ஆகாமல் அனைத்து எபிசோட்களையும் HBO ரிலீஸ் செய்கிறதா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இந்த அறிவிப்புக்கே சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் பிறகு இதன் முன்கதை ஒன்றையும் சீரிஸாக எடுக்கவுள்ளது HBO என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close