வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (14/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (14/11/2018)

முன்பதிவு தொடங்கியது புதிய மாருதி எர்டிகா!

மாருதி சுஸூகியின் புதிய எர்டிகா வரும் நவம்பர் 21 அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்தக் காரின் முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. இந்தக் கார் மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் மாருதியின் அரினா ஷோரூம்களில் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. ரூ.11,000 கொடுத்து இந்தக் காரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

எர்டிகா முன்பக்கம்

புது எர்டிகா இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களோடு வெளியாகிறது. பழைய 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, 105bhp பவர் தரக்கூடிய புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. டீசல் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 90bhp 1.3 லிட்டர் இன்ஜின்தான். 

பழசை ஒப்பிடும்போது புது எர்டிகாவின் ஸ்டைல் கொஞ்சம் மாறியுள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால் இனோவா போலவே இருக்கிறது. காரணம், இதன் அகலமான மூக்கு பகுதியும், ஸ்லிம்மான ஹெட்லைட்டுகளும்தான். LED டெயில் லைட்டுகளை உயர்த்தி வால்வோ ஸ்டைலில் டிசைன் செய்திருக்கிறார்கள். இந்தக் கார் மாருதியின் புதிய ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாவதால் காரின் எடை முன்பை விடக் குறைவாக இருக்கும். 

Ertiga rear

புது எர்டிகா மாருதியின் smartplay டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் வருகிறது. விலை உயர்ந்த வேரியன்ட்டில் கூல்டு கப்ஹோல்டர்கள் உள்ளன. இரண்டு காற்றுப்பைகள், பார்க்கிங் சென்ஸார் போன்றவை ஸ்டான்டர்டாக வருகிறது. 5 நிறங்களில் வரும் இந்தக் காரின் விலையை மஹிந்திரா மராஸோவை விடக் குறைவாக இருக்கும் எனக் கூறுகிறார்கள்.