ட்விட்டரில் ஜாலியாக மோதிக்கொண்ட ஐ.பி.எல் அணிகள்! #Mi #SRH | CSK, SRH, MI invlove in a fun twitter banter

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (14/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (14/11/2018)

ட்விட்டரில் ஜாலியாக மோதிக்கொண்ட ஐ.பி.எல் அணிகள்! #Mi #SRH

நடந்த முடிந்த ஐ.பி.எல் தொடரின்போது சென்னை சூப்பர்கிங்ஸ் உட்பட அனைத்து அணிகளும் ட்விட்டரில் எந்தளவு துடிப்புடன் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஐ.பி.எல் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது. 

ஐபிஎல்

சமீபத்தில்தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. இதில் டெஸ்ட், ஒன்டே, டி20 என அனைத்தையும் வென்றது இந்தியா. இந்தத் தொடருக்காக இந்தியா வந்திருந்த கிரண் பொல்லார்ட்டுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவிட்டனர் பாண்டியா சகோதரர். இவர்கள் மூவரும் ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள். இந்த ட்வீடடை ஷேர் செய்து இதைவிடச் சிறந்த மூன்று பேர் ஆல்ரவுண்டர் காம்போவை யாராவது கண்டுபிடிக்கமுடியுமா! நாங்கள் காத்திருக்கிறோம் என்று ட்வீட் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பக்கம். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷீத் கான், ஷகீப் உல் ஹசன் மற்றும் முகமது நபி ஆகிய வீரர்கள் எடுத்த போட்டோ ஒன்றைப் பதிவிட்டு 'The wait is over' என்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பக்கம். இதற்கு மும்பை இந்தியன்ஸ் பக்கம் 'wait goes on' என்று அவர்கள் வென்ற மூன்று ஐ.பி.எல் கோப்பைகளின் படத்தைப் பதிவிட்டு அவர்களைக் கலாய்த்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close