வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/11/2018)

கடைசி தொடர்பு:00:30 (27/11/2018)

செவ்வாயில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு - நாசாவின் அசத்தல் முயற்சி!

நாசா

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் விண்கலம் வரும் 26-ம் தேதியன்று செவ்வாயை அடைய உள்ளது. அந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் கியூரியாசிட்டி ரோவர் தரையிறங்கிய பின்னர் செவ்வாயில் தரையிறங்கும் முதல் விண்கலம் இன்சைட்தான். இதன் ஆய்வுக்காலம் இரண்டு வருடங்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் செவ்வாயின் ஆழமான உட்பகுதிகளை இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்யும். செவ்வாய் கிரகத்தின் உட்பகுதிகளை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ள முதல் விண்கலம் இதுதான். இதன் மூலமாகப் பெறப்படும் டேட்டாக்கள் மூலமாக நமது பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் பாறைகளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

 

இந்தியாவில் இதன் நேரடி ஒளிபரப்பை வரும் 27-ம் தேதி 1.30 am மணிக்குப் பார்க்க முடியும். நாசாவின் இந்த ஒளிபரப்பு முயற்சி புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கலாம்.