பெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X! | Tata to Launch 45X here on 2019

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (15/11/2018)

கடைசி தொடர்பு:19:41 (15/11/2018)

பெலினோ, i20-க்குப் போட்டி... ஆகஸ்ட் 2019-ல் வருகிறது டாடா 45X!

கோவையில் இருக்கும் கரி மோட்டார் ஸ்பீடுவே ரேஸ் டிராக்கில் இதை டாடா டெஸ்ட் செய்திருப்பதால், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் கியாரன்ட்டி.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டாடா மோட்டார்ஸின் 2 பிரிமியம் கார்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. ஒன்று ஹேரியர் எஸ்யூவி என்றால், மற்றொன்று 45X ஹேட்ச்பேக். இதில் ஹேரியர் குறித்து டாடாவே பல தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தாலும், 45X விஷயத்தில் அந்த நிறுவனம் அமைதியாகவே இருக்கிறது.

45X

இந்நிலையில் இதன் ஸ்பை படங்கள் வெளிவந்திருப்பதுடன், ஆகஸ்ட் 2019-ல் இந்த கார் விற்பனைக்கு வரும் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. நெக்ஸான் & ஹேரியர் போலவே, இதுவும் டிசைன் கான்செப்ட்டில் இருந்து உருவாகப்போகும் கார்தான்!. கோவையில் இருக்கும் கரி மோட்டார் ஸ்பீடுவே ரேஸ் டிராக்கில் இதை டாடா டெஸ்ட் செய்திருப்பதால், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் கியாரன்ட்டி.

45X

ஹேரியர் எஸ்யூவியைத் தொடர்ந்து, டாடாவின் புதிய Impact Design 2.0 கோட்பாடுகளைப் பின்பற்றி தயாரிக்கப்படும் இரண்டாவது கார் 45Xதான். எனவே, காரின் முன்பக்கத்தில் காணப்படும் ‘Humanity Line’, கிரில் மற்றும் ஹெட்லைட்களை இணைத்து, அதை Single Piece போலக் காட்டுகிறது. ஷார்ப்பான ஏர்டேம், மேல்நோக்கிப் போகும் Window Line, முன்பக்க கதவு மற்றும் டெயில் லைட்டை ஒன்றுசேர்க்கும் Shoulder Line, பெரிய வீல் ஆர்ச், 4 ஸ்போக் அலாய் வீல்கள், குட்டியான பனி விளக்குகள், கதவில் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரர்கள், D-பில்லரில் இருக்கும் பின்பக்கக் கதவின் கைப்பிடி என கார் முழுக்கப் பல ஸ்டைலான அம்சங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் மற்றும் 17 இன்ச் அலாய் வீலுக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. 

Tata Motors

45X காரின் கேபின் படங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - MID உடனான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், T-வடிவ சென்டர் கன்சோல், டச் ஸ்க்ரீனுக்குக் கிழே ஏசி வென்ட்ஸ், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என லேட்டஸ்ட் டிசைன் படியே வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். கேபின் தரமும் அசத்தலாக இருக்கும் என நம்பலாம். பலவிதமான ஆக்ஸசரிகளும் ஆப்ஷனலாக வழங்கப்படும். நெக்ஸானில் இருக்கும் அதே பெட்ரோல்/டீசல் டர்போ இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான் 45X காரில் இருப்பதற்கான சாத்தியம் அதிகம்!. என்றாலும், பின்னாளில் 6 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வரலாம். மாருதி சுஸூகி பெலினோ - ஹூண்டாய் எலீட் i20 - ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் போட்டிபோடுகிறது டாடா 45X.

 

படங்கள்: WheelMonk & TeamBhp

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க