வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (16/11/2018)

கடைசி தொடர்பு:15:15 (16/11/2018)

``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...!" - `ஆங்கர்' அனிதா சம்பத்

ன் டிவியில் ஆங்கராக இருப்பவர் அனிதா சம்பத். இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே அனிதா சம்பத்துடைய மீம்கள் குவிந்து கிடக்கின்றன. அவர் மேக்கப் இல்லாமல் இருக்கிற புகைப்படத்தை ட்ரோல் செய்த வண்ணம் இருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதுமட்டுமல்லாமல், அவர் பெயரில் போலி ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்துப் பொய் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து தெரிந்துகொள்ள அனிதா சம்பத்தைத் தொடர்புகொண்டோம்.

அனிதா சம்பத்

``நான் முதல்ல நியூஸ் 7-ல் இருந்தப்போ என்னைப் பத்தி எப்போவாச்சும் ஒரு மீம் வரும். அப்ப எல்லாம் என்னைக்கூட மக்கள் கவனிக்கிறாங்களேனு ஹாப்பியா இருக்கும். இப்போ சன் டிவிக்கு வந்ததுக்கு அப்புறம் என்னைப் பற்றி அதிகமா மீம்ஸ் வர ஆரம்பிச்சது. ரீச்சும் அதிகமாச்சு. எங்கேயாச்சும் என்னுடைய மீமைப் பார்த்தால் என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட ஷேர் பண்ணுவாங்க. அதை நானே ஹாப்பியா என்னுடைய வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுவேன். ஆரம்பத்தில் ஹாப்பியாகத்தான் இருந்துச்சு. ஆனா, வெளியிலெல்லாம் போகும்போது யாருமே என்னை அடையாளம் கண்டு நீங்க அனிதா தானேன்னுலாம் கேட்டதுகூட கிடையாது. நான் சின்னச் சின்ன கடைகளுக்குத்தான் போவேன். இவங்க சொல்ற மாதிரி மேக்கப்லேயும் போயிருக்கேன், மேக்கப் இல்லாமலும் போயிருக்கேன். அப்போதெல்லாம் என்னை ஒருத்தரும் தெரிந்துகொண்டு பேசியது இல்லை. 

நார்மலா நான் மேக்கப் இல்லாமதான் இருப்பேன். ஷூட் ஆரம்பிக்கும்போதுதான் மேக்கப் போட்டுப்பேன். நான் இன்ஸ்டாகிராமிற்கு வந்து ஒரு வருஷம்கூட ஆகல. ஆனா, அங்கே நான் போஸ்ட் பண்ற என் போட்டோஸை வைச்சு மீம்ஸ் வர ஆரம்பிச்சது. என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் உன் போட்டோ டிரெண்ட் ஆகுதுன்னு சொன்னாங்க. என் போட்டோ ஏன் டிரெண்ட் ஆகுதுன்னு எனக்கே தெரியல. நான் எப்பவுமே போட்டோ போஸ்ட் பண்ணுவேன். அதுல குறிப்பா அந்த ஒரு போட்டோ மட்டும் ஏன் டிரெண்ட் ஆகுதுன்னு இப்போ வரை எனக்குத் தெரியல. 

அனிதா சம்பத்

இன்ஸ்டாகிராமில் எனக்கு கமென்ட் பண்ற எல்லோருக்குமே நான் ரிப்ளை பண்ணுவேன். எதனால என்னைச் சிலருக்குப் பிடிச்சதுன்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நாள் கழிச்சு நான் மேக்கப்பில் இல்லாத ஃபோட்டோ டிரெண்ட் ஆச்சு. அந்த போட்டோவை எனக்குத் தெரியாமலாம் யாரும் எடுக்கலைங்க. நான் வால்பாறை போயிருந்தப்போ ஷூட் பண்ண வீடியோவில் ஸ்கீர்ன் ஷாட் எடுத்துருக்காங்க. அந்த வீடியோ பிப்ரவரியில் எடுத்தது. அதை ஏன் இப்போ டிரெண்ட் ஆக்கணும்? எப்படி நான் மேக்கப்பில் இருக்கிற போட்டோவைப் போட்டேனோ அதே மாதிரி நானாகத்தான் மேக்கப் இல்லாத போட்டோ, வீடியோவையும் போட்டேன். உண்மையைச் சொல்லணும்னா நான் அதுல ரொம்பவே அழகாகத்தான் இருக்கேன். நீங்க சொல்ற மாதிரி இருந்திருந்தா, ஐயோ, நாம மேக்கப் இல்லாம யாரும் பார்த்திடக் கூடாதுன்னு அந்த வீடியோவையே போட்டுருக்க மாட்டேனே! 

அனிதா சம்பத்

நான் எல்லோரையும் மேக்கப் இல்லாம பார்க்க ரெடியா இருக்கேன். இத்தனை நாள் அது, என்னுடைய இன்ஸ்டாகிராமில்தான் இருந்துச்சு. இப்போ மட்டும் ஏன் திடீர்னு அதை டிரெண்ட் ஆக்கணும்?

மீம் மட்டும் என்னுடைய பிரச்னை இல்லை. ஏன்னா, அது இரண்டு நாள் ட்ரெண்டாகும். மூன்றாவது நாள் வேற ஏதாவது பற்றிப் பேசுவாங்க. ஆனா, என்னுடைய பெயர்ல போலியா ட்விட்டர், ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க. நான் ட்விட்டரிலேயே இல்லை. நான் போஸ்ட் பண்ண மாதிரி நெகட்டிவ்வா பொய்யான தகவல்களைப் பரப்புறாங்க. நான் விஜய் சார்கூடலாம் நடிக்கலை.. ஆனா, நான் நடிக்கிறதா சொல்லி போஸ்ட் பண்ணியிருக்காங்க! இது எல்லாம்தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மூணு, நாலு அக்கவுன்ட்னா ரிப்போர்ட் கொடுக்கலாம். இத்தனை அக்கவுன்ட் மேல எப்படி ஆக்‌ஷன் எடுக்கச் சொல்றது?

அனிதா சம்பத்

நான் ட்விட்டரில் இல்லைங்குறதை என்னுடைய ஒரிஜினல் அக்கவுன்ட்டில் போஸ்ட் பண்ணிட்டேன். இதுக்கு மேல என்ன பண்ண முடியும்! எல்லோருக்கும் நிறைய வேலை இருக்கு. இன்னொன்னு சொல்லியே ஆகணும். என் மேல எதனால என் ஃபேன்ஸ் இவ்வளவு பாசம் வைச்சிருக்காங்கன்னு தெரியலை. நான் சாதாரண ஆங்கர். நார்மலாத்தான் போஸ்ட் பண்ணிட்டு இருப்பேன். இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவ்வா இருக்கேன். நிறைய பேர் என்னைத் தப்பா சொன்னாலும் எனக்காக சப்போர்ட் பண்ணிப் பேசுற ரசிகர்களுக்கு நன்றி!" என்கிறார், அனிதா சம்பத்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்