வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (16/11/2018)

கடைசி தொடர்பு:15:44 (16/11/2018)

ஹூண்டாய் மாடலில் ஐந்து கார்கள் மட்டுமே விற்பனையான மாடல் எது தெரியுமா?

ந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் 2,81,066 கார்களை தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 7,739 கார்கள் குறைவாக தயாரித்துள்ளது. அதேபோல் மாருதி நிறுவனமும் 15,564 கார்களை குறைவாக தயாரித்துள்ளது. 

கார்

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் இயான் மாடலில் 5,309 கார்கள் விற்பனையானது. ஆனால், அக்டோபர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதேபோல் டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி மாடலில் 8 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மஹிந்திராவின் ரெக்ஸ்ட்டன் மாடலில் 1 கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. மாருதியின் எர்டிகா மாடல் விற்பனையானது செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 64.67 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதியின் செலெரியோ மாடலில் 24.2 சதவிகிதம் விற்பனையானது வீழ்ச்சியடைந்துள்ளது. 

கார்

கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் தொடர்ந்து மாருதி முதலிடத்தில் இருக்கிறது. அதில் கடந்த மாதம் இரண்டாம் இடத்தில் இருந்த ஆல்ட்டோ மாடம் இந்த மாதம் முதலிடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருந்த ஸ்விஃப்ட் நான்காம் இடத்துக்கும். ஆறாவது இடத்தில் இருந்த மாருதி வேகன்-ஆர் ஒன்பதாவது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் அக்டோபர் மாதம் விற்பனையான கார்களில் அதிகபட்சமாக மாருதி ஆல்ட்டோ மாடலில் 22,180 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாருதி பெலினோ 18,657 கார்களும், மூன்றாவது இடத்தில் மாருதி டிசையர் 17,404 கார்களும், நான்காவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் 17,215 கார்களும், ஐந்தாவது இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 15,832 கார்களும், ஆறாவது இடத்தில் ஹூண்டாய் எலீட் i20 13,290 கார்களும், ஏழாவது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் i10 11,820 கார்களும், எட்டாவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா 11,702 கார்களும், ஒன்பதாவது இடத்தில் மாருதி வேகன்-ஆர் 10,655 கார்களும் விற்பனையாகியுள்ளன. அதேபோல், பத்தாவது இடத்தில் மீண்டும் மாருதியின் செலெரியோ மாடலில் 9,260 கார்களும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கார்

கடந்த செப்டம்பர் மாதத்தைப் போலவே அக்டோபர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் 7 இடங்களில் மாருதியும், 3 இடங்களில் ஹூண்டாயும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!

மாடல் யூனிட்
மாருதி ஆல்ட்டோ 22,180
மாருதி பெலினோ   18,657
மாருதி டிசையர்   17,404
மாருதி ஸ்விஃப்ட் 17,215
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 15,832
ஹூண்டாய்  எலீட் i20   13,290
ஹூண்டாய் கிராண்ட் i10 11,820
ஹூண்டாய் க்ரெட்டா 11,702
மாருதி வேகன்-ஆர்   10,655
மாருதி செலெரியோ   9,260

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க