மங்களூரில் ஆஃப் ரோடிங் ட்ரெய்னிங் அகாடமியைத் தொடங்கியது மஹிந்திரா! | Mahindra Inagurates Off-Roading Training Academy in Mangalore!

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (16/11/2018)

மங்களூரில் ஆஃப் ரோடிங் ட்ரெய்னிங் அகாடமியைத் தொடங்கியது மஹிந்திரா!

5 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கும் இகட்பூரியில் இந்த நிறுவனத்தின் முதல் ஆஃப் ரோடிங் ட்ரெய்னிங் அகாடமி தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 1,600-க்கும் அதிகமான டிரைவர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

 

இந்தியாவில் யுட்டிலிட்டி வாகனங்களுக்கான சந்தை மற்றும் சமீபத்தில் ஜாவா பைக்குகளுக்கும் சேர்த்து நன்மதிப்பைப் பெற்றிருக்கும் மஹிந்திரா நிறுவனம், `மஹிந்திரா அட்வென்ச்சர்' எனும் பிராண்டை வைத்திருக்கிறது. இதில் Off-Roading-ல் விருப்பம் கொண்டவர்களை மனதில்வைத்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கும் இகட்பூரியில் இந்த நிறுவனத்தின் முதல் ஆஃப் ரோடிங் ட்ரெய்னிங் அகாடமி தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 1,600-க்கும் அதிகமான டிரைவர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

 

ஆஃப் ரோடிங்

 

இருப்பினும், தென்னிந்தியாவில் தற்போது Off-Roading குறித்த ஆர்வம் அதிகரித்துவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மங்களூரில் தனது இரண்டாவது Off-Roading ட்ரெய்னிங் அகாடமியை ஆரம்பித்திருக்கிறது மஹிந்திரா. 150 ஏக்கர் பரப்பளவில் Western Ghats பகுதியில் அமைந்திருக்கும் இதில், வயர்லெஸ் கருவியுடன்கூடிய தார் 4WD எஸ்யூவிகள் ட்ரெய்னிங் வாகனங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

Off-Roading

 

பேஸிக் லெவல் (Getting Dirty - 4X4 on a Safe Environment) மற்றும் இன்டர்மீடியேட் லெவல் (Trail Survivor - Vehicle Dynamics, Driving Techniques, Tougher Obstacles, Night Off-Roading) எனும் இரு ஆஃப் ரோடிங் வகுப்புகள், மங்களூரில் இருக்கும் இந்தப் புதிய ட்ரெய்னிங் அகாடமியில் பயிற்றுவிக்கப்படும். ஆனால், அட்வான்ஸ்டு லெவல் (Global Explorer) வகுப்பு, இகட்பூரியில் மட்டும்தான் நடத்தப்படும்! வார இறுதி நாள்களில் (சனி & ஞாயிறு) நடைபெறும் இந்த வகுப்புகளில், பேஸிக் மற்றும் இன்டர்மீடியேட் ஆகிய இரண்டுமே சொல்லித்தரப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எனத் தனியாக ஒரு ஷெட்யூல் இருப்பது ப்ளஸ். இங்கே ட்ரெய்னிங் வருபவர்கள், பின்னாளில் மஹிந்திராவின் வாடிக்கையாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close