2 கோடி ரூபாய் மோதிரம்... களைகட்டிய தீப்வீர் ஜோடி திருமணம்! | Deepika Padukone and Ranveer Singhs big fat wedding updates

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (16/11/2018)

கடைசி தொடர்பு:20:08 (16/11/2018)

2 கோடி ரூபாய் மோதிரம்... களைகட்டிய தீப்வீர் ஜோடி திருமணம்!

2 கோடி ரூபாய் மோதிரம்... களைகட்டிய தீப்வீர் ஜோடி திருமணம்!

பாலிவுட் மற்றும் வடஇந்தியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'தீப்வீர்' திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தென்னிந்தியரான தீபிகா படுகோனின் திருமண முறைப்படி 'கொங்கனி' திருமணம், நவம்பர் 14-ம் தேதியும், வடஇந்தியரான ரன்வீர் சிங்கின் முறைப்படி 'சிந்தி' திருமணம், நவம்பர் 15-ம் தேதியும் இத்தாலி நாட்டிலுள்ள 'கோமோ' ஏரியில் நடைபெற்றது. இதில், மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட  40 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

தீப்வீர்

தீப்வீர் ஜோடியின் நடிப்புக்கு மட்டுமல்ல, இருவரின் 'லவ் மொமென்ட்டுக்கும்' தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து பலரும் காத்துக்கொண்டிருந்தனர். ப்ரைவஸிக்காக புகைப்படம், மீடியா போன்றவற்றுக்கு 'நோ' சொல்லியிருந்த இந்த ஜோடி, திருமண புகைப்படங்களை அவர்களின் ரசிகர்களுக்காக இருவரும் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவுசெய்திருக்கின்றனர். இரண்டு வெவ்வேறு முறைப்படி நடந்த இவர்களின் திருமண போட்டோஸ் 'செம க்யூட்!'

முதல் நாள் கொங்கனி முறைப்படி நடந்த திருமணத்தில், தீபிகா கோல்டு மற்றும் மெரூன் நிற பட்டாடையை உடுத்தியிருந்தார். புடவைக்கு ஏற்றதுபோல மாத்தாப்பட்டி, கனமான ஜிமிக்கி, சோக்கர், ஆரம் போன்றவற்றை அணிந்து மிளிர்கிறார் தீபிகா. வெள்ளை குர்தா மற்றும் வேட்டி அணிந்து, தென்னிந்திய மாப்பிள்ளை தோற்றத்தில் மிகவும் உற்சாகமாய் இருக்கிறார் ரன்வீர்.

கொங்கனி திருமணம்

இரண்டாவது நாள் திருமணத்தில் இருவரும் சிந்தி பாரம்பர்ய முறைப்படி சிவப்பு நிற ஆடைகளையே உடுத்தியிருந்தனர். சிவப்பு 'ப்ரோகேட்' ஷெர்வானி, லெஹெரியா தலைப்பாகை, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த துப்பட்டா, ஆடைகளுடன் 'பொல்கி' நெக்லேஸ் என வடஇந்திய மணமகன் உடையில் ரன்வீர் 'வாவ்' தோற்றத்தில் இருக்கிறார். 'பத்மாவத்' திரைப்படத்தில் பார்த்ததைவிட 'ரியல்' திருமண உடையில் மெருகேற்றிய தோற்றத்தில் ஜொலிக்கிறார் தீபிகா. கனமான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த சிவப்பு நிற லெஹெங்கா சோலி, அதற்கு மேட்சான முத்துகள் பதித்த நெத்திச்சுடி, நீண்ட 'Nath', வளையல் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து, அனைவரையும் ஈர்க்கிறார் தீபிகா. அதிலும் துப்பட்டாதான் திரும்பிப்பார்க்கவைக்கிறது. காரணம், 'சதா சௌபாக்யவதி பவா' எனும் வார்த்தைகள் அதில் பதிக்கப்பட்டிருப்பதுதான். இவர்களின் ஆடை ஆபரணங்களை வடிவமைத்தவர், பாலிவுட்டின் டாப் ஆடை வடிவமைப்பாளர் சபியாச்சி.

தீபிகாவின் திருமண மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாம். வைரமாச்சே! ஆனால், ரன்வீர் மிகவும் சிம்பிளான தங்க மோதிரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களை அவர்களின் தாய்மொழியிலேயே வரவேற்க, அங்கு பணிபுரிபவர்களுக்கு கொங்கனி  மற்றும்  இந்தி மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டதாம். கொங்கனி திருமணத்தன்று அங்கு பரிமாறப்பட்ட உணவுகள் அனைத்தும் 'மங்களூர்' வகை உணவுகள்தானாம். அதுவும், தென்னிந்திய முறைப்படி வாழை இலையில்தான் பரிமாறப்பட்டதாம். சிந்தி திருமணத்தன்று சேவ் பர்ஃபி, தால் பக்வான், ரபடி போன்ற வடஇந்திய உணவுகள் பரிமாறப்பட்டதாம்.

Ranveer House

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெற்ற திருமணம் ஒருபுறம் நடக்க, மும்பையிலுள்ள ரன்வீர் இல்லம் தீபிகாவின் வருகைக்காகக் காத்திருக்கிறது. வீடு மற்றும் அங்கிருக்கும் மரங்கள் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. நவம்பர் 21-ம் தேதி, பெங்களூரில் 'பிரைவேட்' வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மும்பையில், நவம்பர் 28-ம் தேதி உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும், டிசம்பர் 1-ம் தேதி, பாலிவுட் நண்பர்களுக்காகவும் தனித்தனியே வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.


[X] Close

[X] Close