Published:Updated:

பூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள்! - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்

விகடன் விமர்சனக்குழு
பூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள்! - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்
பூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள்! - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்

சீனாவில் புதுமையான முயற்சிகள் ஏதும் மேற்கொள்வதில்லை என்று சொல்பவர்களுக்கு பதில் தரக்கூடிய விதத்தில் சீனாவில் உருவாகியுள்ளது உலகின் முதல் நிலத்துக்குக் கீழ் அமைந்துள்ள ராட்சத ஹோட்டல். சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு அருகே பழைய குவாரிகளைப் புதுப்பித்து, கொட்டும் அருவி நீர்களுக்கு நடுவே நிலத்தடியிலிருந்து நிலத்தின் சம பரப்புவரை 330 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது பிரமாண்ட 'ஷாங்காய் வொண்டர் லாண்ட்'. 'ஹாங்கியோ' விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் 'சேஷன்' என்ற மலைப்பகுதியில் அமைந்துள்ளது. 

பூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள்! - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்

விருந்தினர்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் மொத்தம் 17 தளங்களில் பால்கனியுடன்கூடிய 337 அறைகள் சுற்றி நீர்நிலையுடன் பசுமையான சூழல் என விருந்தினர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விருந்தினர்கள் அறை, உணவகம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிலையம், நீச்சல் குளம், செயற்கை அருவி என முழுமையான நட்சத்திர அந்தஸ்துடன் பார்வையாளர்களைக் கவரக் காத்திருக்கிறது 'ஷாங்காய் வொண்டர் லாண்ட். 

பூமிக்கடியில் 17 மாடிகள்; 337 அறைகள்! - உலகத்தை வியக்கவைக்கும் பிரமாண்ட ஹோட்டல்

கடந்த 10 வருடங்களாக 5,000 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், கட்டடக் கலை வல்லுநர்கள் எனப் பல சவால்களுக்கு மத்தியில் இதற்காகப் பணியாற்றியுள்ளனர். பெரும்பாலும் சூரிய மின்சக்திக்கு உட்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களே பயன்படுத்தப்பட உள்ளனர். சுற்றி நீர்நிலை என்பதால் மழை, வெள்ளம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பிரத்தியேகமாகக் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சொகுசு உணவகம் என்பதால் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பார்வையாளர்களின் பாதுகாப்புடன், தனித்துவமான புதிய சாகச அனுபவங்களை வழங்கக் காத்திருக்கிறது 'ஷாங்காய் வொண்டர் லாண்ட்' நிறுவனம்.