Published:Updated:

மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் சேவை ஜூன் 30 வரை ரத்து!

மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் சேவை ஜூன் 30 வரை ரத்து!
மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரயில் சேவை ஜூன் 30 வரை ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மேல்மருவத்தூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் இருமார்க்கத்திலும் இயக்கப்பட மாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

##~~##
தொழுபேடு-ஓலக்கூருக்கும், செங்கல்பட்டு-விழுப்புரத்திற்குமிடையே ரெயில்வே பொறியாளர் பணிகள் இன்று முதல் நடைபெறுகிறது.
இதனால், இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மேல்மருவத்தூர்-விழுப்புரம் பயணிகள் ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.