நமீதாவின் `அகம்பாவம்', பூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!  | Actress Namita movie shoot start today

வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (19/11/2018)

கடைசி தொடர்பு:07:52 (19/11/2018)

நமீதாவின் `அகம்பாவம்', பூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்! 

மிழ் சினிமாவில், `நான் அவனில்லை', `அழகிய தமிழ்மகன்', `பில்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர், நடிகை நமீதா. தற்போது, `அகம்பாவம்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் சத்ரபதி ஸ்ரீமகேஷ்.

நமீதா

இந்தப் படத்துக்கு அருணகிரி இசையமைக்க, ஜெகதீஷ் வி விஷ்வம் ஒளிப்பதிவு செய்கிறார். `அகம்பாவம்’ படத்தின் கதாநாயகியாக நமீதா நடிக்க, வில்லன் பாத்திரத்தில் வாராகி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (19.11.2018) தொடங்குகிறது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வசூலைக் குவித்த ‘புலி முருகன்’ படத்தில் நடித்திருந்தார் நமீதா. அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, தமிழில் ‘பொட்டு’ படத்தில் மாறுபட்ட சாமியாராக நடித்திருந்தார். தற்போது, ‘மியா’, `இன்றைய காதல் டா’ படங்களிலும் நமீதா நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close