வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (19/11/2018)

கடைசி தொடர்பு:19:15 (19/11/2018)

ஜாவாவில் ஆஃப் ரோடிங் போக ஆசையா... 2020 -ல் வருகிறது அட்வென்ச்சர் பைக் #JawaUpdates

ஜாவா..... சமீப காலத்தில் பைக் ஆர்வலர்கள் மட்டுமல்லாது, சாமானியனையும் தன்வசம் ஈர்த்த பெருமை இந்த டூ-வீலருக்கே சேரும். சில நாள்களுக்கு முன்பு அறிமுகமான இந்த பைக், க்ளாஸிக், ரோடுஸ்டர், பாப்பர் எனும் 3 மாடல்களில் வெளிவந்திருக்கிறது. ஆனால், Jawa தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்ட வீடியோவில் இருப்பதுபோல, அட்வென்ச்சர் பைக்/ஸ்க்ராம்ப்ளர் வகை பைக்கை, அறிமுக விழாவில் காண்பிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

 

ஜாவா

 

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் போலவே, ரஃப் அண்ட் டஃப் டிசைனில் ஜாவாவின் அட்வென்ச்சர்/ஸ்க்ராம்ப்ளர் பைக் டிசைன் செய்யப்படலாம். வழக்கமான Jawa-வுடன் ஒப்பிடும்போது வித்தியாசமான ஃப்ரேம் மற்றும் ஸ்விங் ஆர்ம், முன்பக்கத்தில் பெரிய வீல் மற்றும் அதிக சஸ்பென்ஷன் டிராவலுடன் கூடிய USD ஃபோர்க், மேல்நோக்கிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் எக்ஸாஸ்ட் மற்றும் ஹேண்டில்பார், உயரத்தில் இருக்கும் ஃபெண்டர் மற்றும் விண்ட் ஸ்க்ரீன், பின்பக்கத்தில் மோனோஷாக் மற்றும் டிஸ்க் பிரேக் எனக் கணிசமான வித்தியாசங்கள் இருக்கும் என நம்பலாம். 

 

Jawa

 

இதுகுறித்து இந்தியாவில் ஜாவா பிராண்டுக்கான உரிமையைத் தன்வசம் வைத்திருக்கும் க்ளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான அனுபம் தரேஜாவிடம் கேட்டபோது, `இப்போது எங்கள் கவனம் முழுவதும், நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 ஜாவா மாடல்களில்தான் இருக்கிறது. அடுத்த ஆண்டுவரை அதற்கான டீலர் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யமுடிவெடுத்திருக்கிறோம். எனவே, 2020-ல்தான் ஜாவாவிடமிருந்து அட்வென்ச்சர்/ஸ்க்ராம்ப்ளர் பைக்கை எதிர்பார்க்கமுடியும்' என்றார்.

 

Jawa

 

அவர் சொல்வதுபோல, ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கிவிட்டது. விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட பரேக் பைக்கின் அதிகாரபூர்வ அறிமுகம், அடுத்த ஆண்டின் பாதியில் நடைபெறும் என நம்பலாம். ஏனெனில் இது இன்னும் Prototype நிலையில்தான் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் & ஹீரோ எக்ஸ்-பல்ஸ் உடன் போட்டிபோடலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க