பாகிஸ்தானிலிருக்கும் குருநானக் நினைவிடம்... இந்திய சீக்கியர்கள் வணங்க டெலஸ்கோப்! | Govt to build a high power telescope for Indian Sikhs to view Gurudwara Kartarpur

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (21/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (21/11/2018)

பாகிஸ்தானிலிருக்கும் குருநானக் நினைவிடம்... இந்திய சீக்கியர்கள் வணங்க டெலஸ்கோப்!

சீக்கிய நம்பிக்கையை உலகுக்குக் கொடுத்தவர் குருநானக். ஆனால், இன்று இந்திய சீக்கியர்களுக்கு இவரது நினைவிடத்தில் இருக்கும் குருத்வாரா கர்தர்பூர் சாஹிப் தலத்தில் வழிபட முடியாதநிலை. காரணம் இது தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையிலிருந்து  நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இதுதான் உலகின் முதல் குருத்வாரா வழிபாட்டுத் தலம். இதுவரை பாகிஸ்தானில் இருக்கும் இந்தப் புனிதத்தலத்தை எல்லைப்பாதுகாப்பு படையின் பைனாகுலர்களின் வசதியுடன் எல்லையில் இருந்தே பார்த்து வருகின்றனர் இந்தியர்கள். 

குருநானக்

இந்த நிலையில், வரும் வெள்ளி குருநானக்கின் 550-வது ஜயந்தி கொண்டப்படவுள்ளது. இதற்காகப் பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது இந்திய அரசு. இதில் ஒன்றாக நீண்ட தூரம் பார்க்கக்கூடிய உயர்ரக தொலைநோக்கி (telescope) ஒன்றை எல்லையில் நிறுவவுள்ளதாக அறிவித்தது இந்திய கலாசார அமைச்சகம். இதன்மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பாகும் அந்தக் குருத்வாராவை அருகில் இருப்பதைப் போல் எல்லையில் இருந்தே மக்கள் காணலாம் எனத் தெரிவித்துள்ளது இந்திய அரசு. மேலும், இந்த 550-வது பிறந்தநாளைப் போற்றும் விதமாக குருநானக்கின் உருவம் பதித்த நாணயங்கள், தபால்தலைகள் வெளியிடப்படுகின்றன. குருநானக் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட இடங்களின் வழியே செல்லும் சிறப்பு ரயில் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் தொலைநோக்கியை மட்டும் வைத்து சீக்கியர்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. தொலைநோக்கியால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இதைக்கொண்டு மட்டும் முக்கியமான வழிபாட்டிலும், புனிதக்குளியலிலும் எப்படி தங்களால் ஈடுபடமுடியும் என்றும் முன்பு போல வழியில் இருக்கும் உயரமான மரங்கள் மற்றும் புற்களையும் பாகிஸ்தான் தரப்பு தற்போது வெட்டுவது இல்லை என்றும் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர் அவர். இதன் பின்னணியில் உள்ள அரசியல் கொஞ்சம் நீளமானதுதான். இருப்பினும் பாகிஸ்தான் அரசு 2000-ம் ஆண்டு இந்தியாவில் இருப்பவர்களும் இந்தப் புனிதத்தலத்தில் வழிபடச் சிறப்பு பாலம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளித்தது. ஆனால், பின் நடந்த நிகழ்வுகளும், அரசியல் சூழ்நிலைகளும் இதை முன்னெடுத்துச் செல்லவிடாமல் தடுத்தன. இந்த விஷயத்தில் இரு அரசுகளும் உடன்பட்டு ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே தாங்கள் அந்தப் புனித தலத்துக்குச் செல்லமுடியும் என்று ஆதங்கத்தைத் தெரிவித்துவருகின்றனர் பல சீக்கியர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close