உண்டியல் பணம் 1,300ஐ கஜா புயல் நிவாரணத்துக்கு அளித்த எட்டு வயதுச் சிறுமி! | Girl donates her small savings to Gaja Cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/11/2018)

கடைசி தொடர்பு:16:27 (21/11/2018)

உண்டியல் பணம் 1,300ஐ கஜா புயல் நிவாரணத்துக்கு அளித்த எட்டு வயதுச் சிறுமி!

ஜா புயல் நிவாரணத்துக்காகத் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1,300 ரூபாயைக் கொடுத்துதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பூஜிதா.

சிறுமி பூஜிதா சேமிப்பு - கஜா புயல்

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தேவகோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் மக்களிடம் பொருள்களைச் சேகரித்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். 

அந்தத் தன்னார்வலர் குழுவில் தேவகோட்டையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கணேஷூம் ஒருவர். அவருடைய மகள்தான் சிறுமி பூஜிதா. தன் தந்தையும், அவரின் நண்பர்களும் மக்களுக்காகப் பொருள்கள் சேகரிப்பதைக் கண்ட அவர், கடந்த ஒரு வருடமாக  தான் உண்டியலில் சேகரித்து வைத்திருந்த 1,300 ரூபாய் பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்காகக் கொடுத்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். 

பூஜிதா

``குறிப்பிட்டு எந்த ஒரு பொருள் வாங்குவதற்காகவும் அவர் சேமிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே அவளுக்கு சேமிப்புப் பழக்கம் இருக்கிறது. அப்படிச் சேமித்த பணம்தான் இது `` என்கிறார் சிறுமியின் தந்தை கணேஷ்.

சிறுமி பூஜிதா இதுவரை 300-க்கும் மேற்பட்ட மேடைகளில் ஆன்மிகம் சார்ந்தும், சமூக நலன் சார்ந்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close