ரூ.7.44 லட்சத்துக்கு அறிமுகமானது புதிய எர்டிகா! | Maruti Suzuki Launches Second Generation Ertiga at 7.44 Lakhs!

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (21/11/2018)

ரூ.7.44 லட்சத்துக்கு அறிமுகமானது புதிய எர்டிகா!

கார் ஆர்வலர்களின் காத்திருப்புக்கான பதிலாக, 5 கலர்கள் மற்றும் 10 வேரியன்ட்களில் இரண்டாம் தலைமுறை எர்டிகாவை களமிறக்கியுள்ளது மாருதி சுஸூகி. இதற்கான புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், தற்போது புதிய எர்டிகாவின் வெயிட்டிங் பீரியட் 2 - 4 வாரங்கள் என்றளவில் இருக்கிறது. டெலிவரிகள் இம்மாத இறுதியில் தொடங்கிவிடும். ஸ்விஃப்ட், டிசையர், இக்னிஸ், பெலினோ ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் ஐந்தாவது தலைமுறை Heartect ப்ளாட்ஃபார்மில்தான் புதிய எர்டிகாவும் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே முந்தைய மாடலைவிட அளவில் (4,395mm நீளம், 1,735mm அகலம், 1,690mm உயரம், 2,740mm வீல்பேஸ்) வளர்ந்திருந்தாலும், காரின் மொத்த எடையில் 10-20 கிலோ வரை குறைந்திருக்கிறது. 

 

எர்டிகா

45 லிட்டர் பெட்ரோல் டேங்க் - 185/65 R15 டயர்கள் - 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமுறை எர்டிகாவில் இருப்பது, சியாஸில் இருக்கும் அதே 1.5 லிட்டர் SHVS பெட்ரோல்/1.3 லிட்டர் SHVS டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான்! பெட்ரோல் மாடல் 105bhp பவர் - 13.8kgm - 19.34kmpl ஆகியவற்றை வெளிப்படுத்தினால், டீசல் மாடல் 90bhp பவர் - 20kgm - 25.47kmpl தருகிறது. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு என்றாலும், பெட்ரோலில் மட்டும் 4 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடலில் வழக்கமான பாதுகாப்பு வசதிகளுடன் ESP, Hill Hold Assist வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

 

எர்டிகா

 

புதிதாக வந்திருக்கும் ZXi+/ZDi+ வேரியன்ட்களில் ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், 15 இன்ச் அலாய் வீல்கள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், சீட் ஹைட் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் சீட் போன்ற அதிக வசதிகள் இருப்பது ப்ளஸ். அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள், ABS &EBD, சீட் பெல்ட் Pretensioner & Load Limiter, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகிய பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியன்ட்டிலும் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், லேட்டஸ்ட் மாருதி கார்களில் இருக்கும் LED ஹெட்லைட்ஸ், LED DRL, டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை இல்லாதது நெருடல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close