“நான் யாரையும் எதிர்பார்த்து வாழ விரும்பலை. சாப்பிடவும் தங்கவும் காசு வேணும். அதுக்கு உழைச்சுதானே ஆகணும். கஞ்சி குடிக்கணும்னா மரம் ஏறித்தானே ஆகணும்?” என நம்மிடம் சொல்லிக்கொண்டே 30 அடி உயரப் பனைமரத்தில் சரசரவென ஏறிய குப்புசாமிக்கு வயது 85. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பனையேறும் தொழிலை விடாமல் செய்துவருகிறார் இந்த மரியாதைக்குரிய மனிதர்.

“ஈரோட்டுப் பக்கம் பெருந்துறைதான் என் சொந்த ஊருங்க. அப்பாவும் மரம்தான் ஏறுனாரு. எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடி அப்பா இறந்துட்டாரு. அப்போ சாப்பாட்டுக்கே பஞ்சம். படிக்கறதுக்கெல்லாம் வழியே இல்லை. அதனால 15 வயசுக்கு முன்னாடியே மரம் ஏர்ற வேலைக்கு வந்துட்டேன். என் வீட்டுக்காரி பேரு நாச்சம்மா. தெய்வசிகாமணின்னு ஒரு பையன். வீட்டுக்காரி 15 வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு இறந்துட்டா. பையன் பெருந்துறையில இருக்கான். 15 வருஷமா நான் தனியாதான் இருக்கேன்.

முன்ன நூறு ரூபாய் இருந்தா ஈரோடு போயிட்டு வந்துடுவேன். இப்போ போக நூறு ரூபாய், வர நூறு ரூபாய் வேணும். வீட்டு வாடகை, சாப்பிட எல்லாத்துக்கும் பணம் வேணுங்களே. நான் பணத்துக்காக யாரையும் எதிர்பார்க்கவும் மாட்டேன். ஒருநாளைக்குப் பத்து மரம் வரைக்கும் ஏறுவேன். ஒரு மரத்துக்கு 20 ரூபாய் கொடுக்கறாங்க. சில நாள் அஞ்சு, ஆறு மரம்தான் ஏற முடியும்.

வீட்டுக்காரி இறந்ததுல இருந்து 15 வருஷமா நான்தான் சாப்பாடும் செஞ்சுக்கிறேன். காலையில 6 மணிக்கு எந்திரிச்சு, சாப்பாடு ஆக்கி சாப்பிட்டுட்டு வேலைக்குப் போய்டுவேன். பனை மரம், `கள்ளு மரம்’ எல்லாம் ஏறி இருக்கேன். ஆனா குடிக்கற பழக்கம் இல்லை. சொன்னாக்கூட யாருக்கும் நம்பிக்கை வர்றதில்லைங்க. நான் கள்ளு, சாராயம், பிராந்தி அடிச்சிருந்தா இப்போ என்னால மரம் ஏற முடியாது. பீடி சிகரெட், வெத்தலை பாக்குனு எந்தப் பழக்கமும் இல்லை. டீ குடிக்கிறது மட்டும்தான் என்கிட்ட இருக்கற கெட்ட பழக்கம். ஒரு நாளைக்கு மூணு டீகூடக் குடிச்சுப்போடுவேங்க.

எனக்கு ரெண்டே ஆசைதாங்க. ரெண்டொரு தடவை எம்.ஜி.ஆரை நேர்ல பாத்திருக்கேனுங்க. அவர் சமாதியைப் பாக்கணும்னு ரொம்பநாள் ஆசை. நானா போய் வர முடியாது. அதேமாதிரி, உடைஞ்சுபோன என் சைக்கிளுக்கு பதில் வேற சைக்கிள் வாங்கணும்” என்று சொல்லிவிட்டு மரம் நோக்கி நடக்கத்தொடங்கினார்.

இந்த உழைப்பு மனிதரின் ஒருநாள் வாழ்க்கை இங்கே புகைப்படங்களாக...