`செவ்வாய்கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு அத்துமீறலைப் பற்றித் தெரியாதுதான்!' - நடிகை ரேவதி | actor revathy condemns mohanlal statement over metoo movement and insensitivity

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (22/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (22/11/2018)

`செவ்வாய்கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு அத்துமீறலைப் பற்றித் தெரியாதுதான்!' - நடிகை ரேவதி

செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு பாலியல் அத்துமீறல்களைப் பற்றியும், அத்துமீறல்களை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தெரியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகை ரேவதி.

``உணர்வுடன் பேசுவதை சில மனிதர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது? ஒரு நடிகர் மீ-டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்கிறார். நடிகை அஞ்சலி மேனன் சொல்வதைப்போல, `செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு பாலியல் அத்துமீறல்களைப் பற்றியும், அத்துமீறல்களை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தெரியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகை ரேவதி.

நன்கொடை திரட்டுவதற்காக அபுதாபியில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் கடந்த திங்களன்று பேசிய நடிகர் மோகன்லால், ``#Metooஐ ஒரு இயக்கமாகக் கருதமுடியாது. மீடூ என்பது ஒரு ஃபேஷன் ட்ரெண்ட்டைப் போன்றதுதான் என்று பேசியிருந்தார். மீடூ என்பது ட்ரெண்ட் என்னும் அவரது கருத்து குறித்து மற்றுமொரு நேர்காணலில் கேட்கப்பட்டபோதும், ``நடந்த எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் தெரியும். தற்போது மலையாளத் திரையுலகில் எந்தப் பிரச்னைகளும் இல்லை. எதையும் புதிதாகச் சொல்லி பிரச்னைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ட்ரெண்ட் இன்னும் சில நாள்களுக்கு இருக்கும். சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற துறையிலும் கூட இப்படித்தான். ஆண்களும் மீடூ புகார்களோடு வர வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்தார்.

                                   twitter capture

நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் சங்கமான ’AMMA’வின் மீது நம்பிக்கை இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார் ரேவதி. அவ்வழக்கின் முதல் குற்றவாளியான நடிகர் திலீப்பை அந்த அமைப்பு ஆதரிப்பதாகவும் கடந்த அக்டோபர் மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில் ரேவதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close