'இது நிச்சயம் அழிவுக்கானது'- பசுமை இல்ல வாயு அதிகரிப்பு குறித்து எச்சரிக்கும் ஐ.நா | World Meteorological Organization warning greenhouse gases increase in atmosphere

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (23/11/2018)

கடைசி தொடர்பு:09:05 (23/11/2018)

'இது நிச்சயம் அழிவுக்கானது'- பசுமை இல்ல வாயு அதிகரிப்பு குறித்து எச்சரிக்கும் ஐ.நா

வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயு, முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உலக வானிலை அமைப்பு.

 ஐ.நா

ஐ.நா சபையின் கீழ் இயங்கும் உலக வானிலை அமைப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாகப் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சமீப காலமாக, சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, புவி வெப்ப மயமாதல் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்குப் பசுமை இல்ல வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பதே காரணம் என விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டில் பசுமை இல்ல வாயுக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது உலக வானிலை அமைப்பு. "நாம் உடனடியாக கார்பன் டை-ஆக்சைடு மற்றும் இதர பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டைக் குறைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால், காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியில் ஏற்படும் தாக்கம் நிச்சயம் அழிவுக்கானது. நாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் ஏற்கெனவே கடந்துவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார், பொதுச் செயலாளர் பெட்டேரி டாலஸ் (Petteri Taalas). இதைப்போன்ற நிலைமை பூமியில் 3-5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால் அப்போது, வெப்பநிலை 2-3°C என்ற அளவிலும் கடல்நீர் மட்டம் இப்போது இருப்பதைவிடவும் 10-20 மீட்டர் உயரத்தில் இருந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்.


[X] Close

[X] Close