வெளியிடப்பட்ட நேரம்: 07:51 (24/11/2018)

கடைசி தொடர்பு:07:51 (24/11/2018)

மினஸ்ட்ரோனே சூப், பீட்ரூட் சூப், டொமேட்டோ சூப் மழை நேரத்திற்கு ஏற்ற சூப் வகைகள்! #Recipes

மினஸ்ட்ரோனே சூப், பீட்ரூட் சூப், டொமேட்டோ சூப் மழை நேரத்திற்கு ஏற்ற சூப் வகைகள்! #Recipes

ரோக்கியமான உணவுகளில் சூப்புக்கென்று தனியிடம் உண்டு. சீனியர் சிட்டிசன்கள், உடல்நலம் குன்றியவர்கள், டயட் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஹோட்டல்களில் சூப்பில் அதிக அளவில் ஃப்ரெஷ் க்ரீம், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கிறார்கள். வீட்டில் செய்யும்போது அதற்குப் பதிலாக கொழுப்புச்சத்து குறைந்த பால் (டோன்டு மில்க்) சேர்க்கலாம். சுவையும் மாறாது; ஆரோக்கியமும் அதிகம். பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், கார்ன், காராமணி, பார்லி ஆகியவற்றைக்கொண்டு மழை நேரத்துக்கு ஏற்ற ஹெல்த்தியான சூப்பை வீட்டிலேயே செய்யலாம்

க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்

தேவையானவை:

வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 7 அல்லது 8
கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப்
பூண்டு - 2 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்)
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

சூப்

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், முட்டைகோஸ் ஆகியவற்றையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி, பிரிஞ்சி இலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு, மூடி 4 அல்லது 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி கார்ன், பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து தனியாக வேகவைக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு கலவையிலிருந்து பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு, வெந்த உருளைக்கிழங்கு, வெங்காயம், கோஸ், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதில் பால் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கவும் (மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிதளவு பால் சேர்க்கலாம்). பிறகு அதில் வேகவைத்த மற்ற காய்கறிகளையும் கலந்து, மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது ஹெல்த்தி சூப் என்பதால் வெண்ணெயோ ஃப்ரெஷ் க்ரீமோ சேர்க்கவில்லை. விரும்பினால் பாலுக்குப் பதில் சேர்த்துக்கொள்ளலாம்.


பீட்ரூட் - டொமேட்டோ சூப்

தேவையானவை:

பெரிய தக்காளி - 5
பீட்ரூட், வெங்காயம் - தலா ஒன்று
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

ரெசிப்பி

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, பீட்ரூட் இரண்டையும் சேர்த்து 3, 4 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, அதில் 4 கப் தண்ணீர், உப்பு, பிரிஞ்சி இலை சேர்த்து, குக்கரை மூடி 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். நன்றாக ஆறியதும், பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்பைச் சூடு செய்து மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும் (சூப் மிகவும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்).

மினஸ்ட்ரோனே சூப்

தேவையானவை:

வெங்காயம் - ஒன்று
தக்காளி - 6
கேரட், குடமிளகாய் - தலா ஒன்று
பீன்ஸ் - 6
கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த காராமணி - 3 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த மேக்ரோனி - அரை கப்
பூண்டு - 3 பல்
ஆரிகானோ - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பேசில் இலைகள் அல்லது காய்ந்த பேசில் - ஒரு டீஸ்பூன்
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு  - தேவைக்கேற்ப

ஆரோக்கியம்

செய்முறை:

4 தக்காளிகளைச் சுடுநீரில் போட்டு 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு மேல் தோலை உரித்து, நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், பூண்டு, குடமிளகாய், மீதமுள்ள 2 தக்காளி, கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயிலை ஊற்றி, பூண்டு, வெங்காயம், குடமிளகாய், தக்காளி, கார்ன், கேரட், பீன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் 6 கப் தண்ணீரை ஊற்றி உப்புச் சேர்த்து 7, 8 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். அதன் பிறகு தக்காளி விழுது, மேக்ரோனி, காராமணி, சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். பின்னர் அதில் ஆரிகானோ, பேசில் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்