வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (23/11/2018)

கடைசி தொடர்பு:18:40 (23/11/2018)

கார்களின் விலையை உயர்த்தும் பி.எம்.டபிள்யூ.!

ந்தியாவில் இருக்கும் பி.எம்.டபிள்யூ.(BMW) நிறுவனம் ஜனவரி 1-ம் தேதி முதல் தனது கார்களின் விலையை 4% வரை உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. 

பி.எம்.டபிள்யூ

விலை உயர்ந்த சொகுசுக் கார்களில் பி.எம்.டபிள்யூ காருக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. ஒரு முறையாவது காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைத்துக் கார் பிரியர்களுக்கும் கட்டாயம் தோன்றியிருக்கும். ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ 1916-ம் ஆண்டு உலகத்துக்கு அறிமுகம் ஆனாலும், 2006-ம் ஆண்டு தான் இந்தியாவில் தன் நிறுவனத்தை அமைத்தது. 2007-ம் ஆண்டு முதல் பி.எம்.டபிள்யூ கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையிலேயே கார்களை தயார் செய்து நாடு முழுவதும் விற்பனையும் செய்து வருகிறது. 

பி எம் டபிள்யூ

பி.எம்.டபிள்யூ. 3 சீரீஸ் முதல் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 வரையிலான ஏழு மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், பி.எம்.டபிள்யூ  சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 4 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை விலை உயர்த்தப்படுவதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இந்த அறிக்கை குறித்து பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனத்தின் தலைவரான விக்ரம் பவா கூறுகையில், இந்தியாவில் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கி வருபவர்கள் நாங்கள். அதுமட்டுமின்றி எங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தையும் வழங்குகிறோம். தற்போது ஜனவரி 1 முதல் கார்களின் விலை 4 சதவிகிதம் வரையில் உயர்த்த முடிவெடுத்துள்ளோம். மினி ரேஞ்ச் மற்றும் பி.எம்.டபிள்யூ. மோட்ராடு (இருசக்கர வாகனங்கள்) பிரிவுகளில் மட்டும் விலை உயர்த்தப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க