இந்த வார ஆனந்த விகடனின் 9 ஹைலைட்ஸ்! | highlights of this week anandha vikatan issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (23/11/2018)

கடைசி தொடர்பு:18:39 (23/11/2018)

இந்த வார ஆனந்த விகடனின் 9 ஹைலைட்ஸ்!

சமூக ஊடகங்களில் மெள்ள மெள்ள செய்திகள் வெளியாகத் தொடங்கிய பிறகே தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள். தங்களுக்கு உதவி செய்ய வரும் நண்பர்களின் வாகனங்களில், இளநீர்க் காய்களை அள்ளி நிரப்பி, தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள் காவிரிப்படுகை மக்கள். இந்த அன்பும் மனிதநேயமும்தான் எப்போதும் வீழ்ந்த வாழ்வை மீட்டெடுத்திருக்கிறது. விகடனின் உணர்வுபூர்வ கவரேஜ் > மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம் #RestoreDelta

 'கஜா துயர் துடைப்போம்!' என்ற முழக்கத்துடன் களப்பணியில் தன்னையும் இணைத்துக்கொள்கிறான் விகடன். இதற்காக விகடனின் 'வாசன் அறக்கட்டளை' சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு. நாம் செய்ய வேண்டியவை > கைகோப்போம், 'கஜா துயர் துடைப்போம்!' #RestoreDelta 

'ரங்கநாதன் தெருவைக் கடக்குறப்போ, உங்க மனநிலை என்னவா இருக்கும்?' 'வெயில்' படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்துனீங்க. இப்போ 'ஜெயில்' படத்தில் நடிகரா வேலை வாங்கியிருக்கீங்க... 'டைட்டிலுக்கு என்ன காரணம்?' - இயக்குநர் வசந்தபாலனின் ஓபன் டாக் > "எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ, அவையெல்லாம் 'ஜெயில்'தான்!"

'இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக...' திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். விடுதலைப் புலிகளின் போராட்டக் களம் பற்றிய சம்பவங்களைத் தொகுத்து, பழ.நெடுமாறன் எழுதியிருக்கும் 'தமிழ் ஈழம் சிவக்கிறது' என்ற தலைப்பிலான புத்தகங்களை அழிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதோ பழ.நெடுமாறனின் தெறிக்கும் ரியாக்‌ஷன்ஸ் பேட்டி > "சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!" 


 

ஆணவக்கொலைகளை ஆதரிப்பவர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்; வெளிப்படையாகவே எழுதுகிறார்கள்; வெளிப்படையாகவே சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்; வெளிப்படையாகவே சாதிச்சங்கங்களையும் சாதிக்கட்சிகளையும் நடத்துகிறார்கள். என்னதான் செய்வது? > இன்னும் எத்தனை முறை..?

ஆரம்பத்தில் இந்த ஐடியாவை சொன்னபோது 'யார்ரா இவன் கோமாளி' என்பது போலத்தான் பலரின் ரியாக்‌ஷன் இருந்தது. அதே ஐடியாவில் உருவாக்கப்பட்ட ரெட்பஸ்ஸை ஐபிபோ நிறுவனம் ரூ.700 கோடிக்கு வாங்கிக்கொண்டது. இது சாத்தியமான வெற்றிக் கதையும் சூத்திரங்களும் > 'கேம் சேஞ்சர்ஸ்' REDBUS கதை! 

30 வருடமாக தலையில் பிணத்தைச் சுமந்துச் சுமந்து பிள்ளைகளை இன்ஜினீயர் வரை படிக்கவைத்த தருமனை தெரியுமா உங்களுக்கு?  தவறி விழுந்து தண்டவாளத்தில் அடிபட்ட, தற்கொலை செய்துகொண்ட ஜீவன்களையெல்லாம் ஸ்ட்ரெச்சரில் வைத்து நான்கைந்து கிலோமீட்டர் தலையில் சுமந்துச் செல்லும் இவர்கள் ஊழியர்கள் அல்லர்; பிணத்தை வாரிப் போடும் கூலிகள். வாசிக்க > நான்காம் சுவர்!

இன்று நாம் கொண்டாடும் ஸ்பைடர்மேன், தி ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேன்ஜ், தி ஃபென்டாஸ்டிக் ஃபோர், டேர்டெவில், பிளாக் பேந்தர், எக்ஸ்-மென், ஏன்ட்மேன், அயர்ன் மேன், தோர் போன்ற மார்வெல் சூப்பர்ஹீரோக்களின் தொடக்கப்புள்ளியைத் தேடினால் 'ஸ்டேன் லீ'யைத் தெரியாதா உனக்கு?" என கூகுளே நம்மை ஏளனம் செய்யும். அறிக > சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோ! 

 

ஏன் குழந்தை குட்டிகளோடு, மூட்டை முடிச்சுகளோடு இரவோடு இரவாக ரோஹிங்கியா மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்களுடைய குடிசைகள் லும்பன் கும்பல்களால் கொளுத்தப்படுகின்றன? மியான்மர் ராணுவமும் தன் பங்குக்கு ஏன் ரோஹிங்கியாக்களைத் தேடித் தேடி வேட்டையாடுகிறது? ஒரு நாட்டின் ராணுவம் அந்நாட்டுக் குடிமக்கள்மீதே திருப்பப்படுவது என்ன மாதிரியான ஜனநாயகம்? மியான்மர் மாறவேயில்லையா? - எப்படி இருந்த ஆங் சான் சூகி... இப்படிச் செய்கிறாரே? - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

 

இதுமட்டுமா... நம்மை அமைதிப்படுத்தும் `அன்பே தவம்', விறுவிறுப்பான 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடர்கள், தெறிக்கும் கார்ட்டூன், கரைக்கும் கவிதைகள், வண்ணதாசன் சிறுகதை, ஜோக்குகள், துணுக்குகள் என புரட்டப் புரட்ட புத்துணர்வு ததுந்தும் இந்த வார ஆனந்த விகடன் - மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: http://bit.ly/2PybFIQ


[X] Close

[X] Close