Published:Updated:

ஒடிசா ஏவுகணை தளத்தில் பயங்கர தீ விபத்து!

ஒடிசா ஏவுகணை தளத்தில் பயங்கர தீ விபத்து!
ஒடிசா ஏவுகணை தளத்தில் பயங்கர தீ விபத்து!

ஒடிசா: ஒடிசாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுகணை தளத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வெடி மருந்து ஆய்வு கூடத்தில் தீ பரவியதால் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பூமிக்கு அடியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை  நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்தையொட்டி கிடங்கு உள்ள வளாகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.