Published:Updated:

சுவையான தண்ணீர், ஜிலுஜிலு காற்று, வைஃபை மரங்கள்... கோவை எப்பவும் ஸ்பெஷல்தான்! #HappyCoimbatoreDay

சுவையான தண்ணீர், ஜிலுஜிலு காற்று, வைஃபை மரங்கள்... கோவை எப்பவும் ஸ்பெஷல்தான்! #HappyCoimbatoreDay
சுவையான தண்ணீர், ஜிலுஜிலு காற்று, வைஃபை மரங்கள்... கோவை எப்பவும் ஸ்பெஷல்தான்! #HappyCoimbatoreDay

கலாசாரத்தையும் மரியாதையையும் கலந்து, இரண்டு தேக்கரண்டி மாடர்ன் டெக்னாலஜியையும் சேர்த்து மொத்தமாக உருவாகி நிற்கிறது தான்ங்க நம்ம ஊரு கோயம்புத்தூரு. இங்க இருந்து எந்த ஊருக்குப் போனாலும் நாலு வார்த்தை பேசின உடனே 'நீங்க கோயம்புத்தூரா?'' என்று கேட்கப்படாமல் கோவைவாசிகள் கடந்திருக்க மாட்டார்கள். மனதிலும் பேச்சிலும் மரியாதை மணக்கும் கோயம்புத்தூர் பேச்சு வழக்கில் நிறைய சினிமா படங்களைப் பார்த்திருப்போம். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையாக இருப்பினும், அதற்கு இணையான எல்லா அம்சங்களையும் கொண்டு நாளுக்கு நாள் புதிய விசயங்களைப் பொருத்தியும் உள்வாங்கிக்கொண்டும் வளர்கிற மாவட்டம் கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் குசும்பையும் தாண்டி தமிழக மக்கள் நேசித்து இந்த ஊரைப் பெரிதும் மதிக்கக் காரணமாக சில சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். 

மற்ற ஊர்களில் வெயில் மண்டையைப் பிளந்து ஸ்ட்ரா போட்டு குடித்துக்கொண்டிருக்கும் நாள்களில்கூட உலகின் இரண்டாம் சுவை நீரென பெயர்பெற்ற சிறுவாணியைப் பருகி, மிதமான வெயிலும் சாரல் மழையும் மக்களின் மனதை உலர்த்தியும் அலசியும் வருடக்கணக்கில் கைகோத்து, அவர்களைத் தன்மையுடன் பயணிக்கவைக்கிறது எனலாம். நீரும் தட்பவெப்ப நிலையுமே மக்களின் சொர்க்கமாக இந்த ஊரை வெற்றிக்கொடி நாட்டச் செய்கிறது.

சுவையான தண்ணீர், ஜிலுஜிலு காற்று, வைஃபை மரங்கள்... கோவை எப்பவும் ஸ்பெஷல்தான்! #HappyCoimbatoreDay

நிறைய பஞ்சாலைகள், விசைத்தறிகள், தொழிற்சாலைகள் எனப் பலருக்கும் வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், பொறியியல், கலை அறிவியல்  கல்லூரிகள், புகழ் பெற்ற பாரதியார் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம்  என மாணவர்களின் எண்ணிக்கையைத் தன்வசம் வைத்துள்ளது கோவை. ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் முதலில்  நிரப்பப்படும் கல்லூரிகளில் பெரும்பாலும் கோயமுத்தூர் கல்லூரிகளே. இங்கு இருக்கும் பழக்கவழக்கங்களும் ஊரின்தன்மையும் மாணவர்களின் விரும்பம் மட்டுமில்லாமல் பெற்றோர்களின் விருப்பமாகவும் இருப்பதால், கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகம்! 

இலவச வை-ஃபை மரங்கள், உலகின் இரண்டாம் பெரிய க்ரீன் டெக் (SIERRA-ODC) கட்டடம், சரவணம்பட்டி ஐடி கம்பெனிகள் என வரிசைப்படுத்தி, இப்போது ஸ்மார்ட் சிட்டி என்னும் பெயரைக் கொண்டிருந்தாலும், பிற மாநிலத்தவர்களின் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் மாடர்னிட்டி என்னும் பெயரில் மக்களின் தன்மை சீர்கெடாமல் அவர்களின் பிரத்யேகத்துடனே வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு வழக்கம் மட்டுமின்றி உணவிலும் உடையிலும் மென்மையே தவழ்ந்திருக்கும். பெருமளவில் காரம் சேர்க்காத மிதமான உணவு வகையே இவர்களின் அன்றாட சுவையாகும். ஆடை கலாசாரம் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் மிக வலுவான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கோவையில் மட்டும் அத்தனை பெரிய மாற்றமின்றி நுட்பமான உடை மாற்றங்களையே கையாண்டு பழக்கப்பட்டிருக்கின்றனர். இதுவே இவர்களின் தனிச்சிறப்பாக அமைவதனால், கோயம்புத்தூருக்கேயான  தனித்தன்மையை எப்போதும் நிலைநாட்டிக் கொண்டாடுகிறது. 

தென்னிந்திய மான்செஸ்ட்டரின் சிறப்பான சூழலில் வாழும் மனதளவிலும் மான்செஸ்ட்டராக இருக்கும் கோவை மக்களுக்கு, 'கோவை தின வாழ்த்துக்கள் !'