14-ம் ஆண்டில் நாணயம் விகடன்... பலன் தரும் 10 கட்டுரைகள்! | Naanayam Vikatan in its 14th year! Special 10 stories from this issue.

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (26/11/2018)

கடைசி தொடர்பு:12:21 (26/11/2018)

14-ம் ஆண்டில் நாணயம் விகடன்... பலன் தரும் 10 கட்டுரைகள்!

இந்த இதழ்  நாணயம் விகடன்: https://bit.ly/2RkdjKY

நாணயம் விகடன் 14-ம் ஆண்டு சிறப்பிதழுக்காக சோழா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட்டுகள் குழு நமக்காக லாபம் தர வாய்ப்புள்ள 14 பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். முந்தைய டேட்டாக்களுடன், பங்கீன் மதிப்பீடு, சாதக அம்சங்கள், ரிஸ்க் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பரிந்துரைகளில் கஜாரியா டைல்ஸ் தொடங்கி டிசிபி வங்கி வரையிலான 14 பங்குகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரத்தை '14 பளிச் பங்குகள்!' எனும் கவர் ஸ்டோரி தருகிறது.

பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் வகைகளிலிருந்து மொத்தம் 14 ஃபண்டுகள் (7 ஃபண்ட் வகையிலிருந்து ஒவ்வொன்றிலும் தலா இரண்டு ஃபண்டுகள்) தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறோம். இந்த 14 ஃபண்டுகளையும் ஒருவர் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்க வேண்டுமென்பதில்லை. இவற்றில் உங்களுக்குத் தேவையான 5-6 ஃபண்டுகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தப் பரிந்துரைகளை அறிய 'உங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய 14 மியூச்சுவல் ஃபண்டுகள்!' கவர் ஸ்டோரியை நாடலாம்.

மொபைலில் A - Z அத்தனை விஷயங்களுக்கும் ஆப்ஸ்தான் அச்சாணி. அவற்றில் சில முக்கியமான ஆப்களை மொபைலில் வைத்துக்கொண்டால், நம் நிதி நிர்வாகமும், பொருளாதாரமும் இன்னும் மேம்படும். அப்படி உதவும் 14 ஆப்கள் 'விரல்நுனியில் பணத்தை நிர்வகிக்கும் 14 ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!' எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன. உங்கள் தேவையைப் பொறுத்து இவற்றை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். 

அரசு ஊழியரோ, தனியார் ஊழியரோ, நகரத்தில் இருப்பவரோ, கிராமத்தில் இருப்பவரோ, ஆணோ, பெண்ணோ - யாராக இருந்தாலும் ஆயுள் காப்பீட்டு பாலிசியும், மருத்துவக் காப்பீட்டு பாலிசியும் அவசியம் எடுத்து வைத்திருக்க வேண்டும். இதுவரை இந்த இரண்டு வகையான பாலிசியையும் எடுக்காதவர்கள் சிறப்பான ஆயுள் காப்பீட்டு பாலிசியையும், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எப்படித் தேர்வு செய்வதென்று 'பெஸ்ட் லைஃப் & மெடிக்ளெய்ம் பாலிசிகள்... தேர்வு செய்ய 14 எளிய வழிகள்!' எனும் வழிகாட்டும் கட்டுரையில் பார்ப்போம்.

ஜி.பி.எஃப், சி.பி.எஃப், சி.பி.எஸ், என்.பி.எஸ், பி.பி.எஃப், இ.பி.எஃப் முதலான பென்ஷன் திட்டங்கள் குறித்தும், இந்தத் திட்டங்கள் மூலம் உரிய பலன்களைப் பெறவும் முழுமையாக வழிகாட்டுகிறது 'உங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும் பென்ஷன் திட்டங்கள்!' எனும் சிறப்புப் பார்வை. 


ஐ.டி. பிசினஸில்தான் அதிக வருமானம் சம்பாதிக்க முடியும் என்பதல்ல; அக்ரி பிசினஸிலும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும். விவசாயம் ஒரு தொழிலல்ல... அதுவொரு வாழ்வியல் முறை என்று பலர் சொன்னாலும், விவசாயத்தின்மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். நாமும்  விவசாயத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாமே என்கிற விருப்பத்துடன் அடிப்படைக் கேள்விக்கான பதில்கள் 'அள்ளித் தரும் அக்ரி பிசினஸ்!' எனும் முக்கியக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

'வீட்டைக்  கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்' என்பது போன்ற பழமொழி சொந்த வீடு வாங்குவதன் முக்கியத்துவத்தை, வீட்டைக் கட்டுவதில் இருக்கும் சிரமத்தை நமக்கு உணர்த்தும். ஒரு வீட்டையோ, மனையையோ சிக்கலில்லாமல் வாங்கும் சூத்திரம் குறித்து 'சொந்த வீடு... சிக்கல் இல்லாமல் வாங்குவது எப்படி?' எனும் தலைப்பில் விவரிக்கிறார், நவீன்ஸ் ஹவுஸிங் நிர்வாக இயக்குநர் ஆர்.குமார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 'மினிமலிஸ்ட்' வாழ்க்கைக்கு 5 வழிகளுடன் வழிகாட்டுகிறது 'மினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை!' எனும் கட்டுரை.

``மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பெரும் பணக்காரங்களுக்குத்தான். நம்ம மாதிரியான சாதாரண மனுஷங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது" என்கிற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. குறைந்தது 100 ரூபாய்கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்கிற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாதாரண மனிதர்கள் மூன்று பேரின் வெற்றிக் கதை இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்!

முதலீட்டாளர்களைப் பொதுவாக, இரண்டு  வகைகளாகப் பிரிக்கலாம். சேமிப்பாளர் (saver) என்பது ஒருவகை, முதலீட்டாளர் (investor) என்பது இன்னொரு வகை. ஒருவரால் 100% சேமிப்பாளராகவோ அல்லது 100% முதலீட்டாளராகவோ இருக்க முடியாது. எப்படி என்பதை 'நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா?' எனும் தலைப்பில் சொல்கிறது முதலீட்டு ரகசியங்கள் தொடர்.

ஃபிரிட்ஜ் வாங்கக் கடன், ஏ.சி வாங்கக் கடன், டூவீலர் கடன் என எடுத்ததெற்கெல்லாம் நாம் கடன் வாங்கினால், அதிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மோசமான நிலையை எட்டிவிடும். கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்களை 'கடன்... கவனி... வாங்கு!' என தனது தொடரில் அடுக்கிறார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி 

 இந்த வார நாணயம்  விகடன் இதழை வாங்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2Qpa204


[X] Close

[X] Close