அவெஞ்சர்ஸ் டிரெய்லர் சாதனையை நெருங்கிய `தி லயன் கிங்' டீசர்! | The Lion King teaser becomes second after Avengers for the most number of views in first 24 hours

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/11/2018)

கடைசி தொடர்பு:15:15 (26/11/2018)

அவெஞ்சர்ஸ் டிரெய்லர் சாதனையை நெருங்கிய `தி லயன் கிங்' டீசர்!

கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களைத் தூசிதட்டி புதிதாக லைவ்-ஆக்ஷனில் எடுத்துவருகிறது டிஸ்னி நிறுவனம். இப்படி டிஸ்னி எடுக்கும் அனைத்து படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால், இப்போது வெளியாக இருக்கும் 'தி லயன் கிங்' படத்தின் ரீமேக்குக்கு எப்போதையும்விட அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த ரீமேக் 1994-ல் வெளிவந்த அனிமேஷன் படத்தின் தீவிர ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரீமேக்கின் டீஸர் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. வெளியான முதல் 24 மணிநேரத்தில் அனைத்து டிஜிட்டல் தளங்களையும் சேர்த்து உலகமெங்கும் 22.5 கோடி வியூஸை பெற்றுள்ளது.

தி லயன் கிங்

இதன்மூலம் வெளியான முதல் 24 மணிநேரத்தில் அதிகம் காணப்பட்ட பட டிரெய்லர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்த டீசர். இதன்மூலம் முதல் இடத்தில் சுமார் 23 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார் படத்தின் டிரெய்லர் சாதனையை நூலிழையில் முறியடிக்கத் தவறியது இந்த டீசர். இதேபோன்று ரீமேக் ஆகி வெளிவந்த ஜுங்கிள் புக் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம்தான் இதுவும் காட்சியாக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் சமூகவலைதளங்களில் பாசிட்டிவ்வாக ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க VFX-ஐ நம்பி இருக்கும் இப்படத்தை எப்படி லைவ் ஆக்‌ஷன் என்று கூறலாம் என இன்னொரு புறம் விவாதங்களும் நெட்டிசன்கள் இடையே ஏற்பட்டுவருகின்றன. அடுத்த வருடம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது இந்தத் திரைப்படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close