வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (26/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (26/11/2018)

த.மு.எ.க.ச வழங்கும் 2017-18-ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், தமிழில் 2017-ம் ஆண்டில் வெளியான கலை இலக்கிய நூல்கள், குறும்படம், ஆவணப்படத்துக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை த.மு.எ.க.ச-வின் முகநூல் பக்கத்தில் அதன் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசனும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யாவும் வெளியிட்டுள்ளனர்.

விருதுகள்

அதன் விவரம் வருமாறு:

 

நாவல்

அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது

நூல் : பெயல்

ஆசிரியர் : சைலபதி

வெளியீடு : யாவரும் பதிப்பகம்

 

சிறுகதைத் தொகுப்பு

அகிலா சேதுராமன் நினைவு விருது

நூல் : பூர்ணாஃஹூதி

ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

 

சிறந்த கவிதைத் தொகுப்பு

வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள்

ப.ஜெகந்நாதன் நினைவு விருது

நூல் : மகிழ்ச்சியான பன்றிக்குட்டி

ஆசிரியர் : வெய்யில்

வெளியீடு : கொம்பு பதிப்பகம்

 

விளிம்புநிலை மக்கள் பற்றிய சிறந்த படைப்பு

அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது

நூல் : பேட்டை

ஆசிரியர் : தமிழ்ப்பிரபா

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

 

சிறந்த தொன்மம்சார் படைப்பு

தோழர் கே.முத்தையா நினைவு விருது

நூல் : 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நிலம்

ஆசிரியர் : முனைவர் சி.இளங்கோ

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்

 

சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல்

தோழர் இரா.நாகசுந்தரம் நினைவு விருது

நூல் : தமிழ்ப் புதினங்களில் பெண்கள் ஆண்கள் சாதிகள்

ஆசிரியர் : எம்.ஆர்.ரகுநாதன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்

 

சிறந்த மொழிபெயர்ப்பு நூல்

வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது

குஜராத் திரைக்குப் பின்னால்

ஆசிரியர் : ஆர்.பி.ஸ்ரீகுமார

தமிழில் : ச.வீரமணி - தஞ்சை ரமேஷ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

 

சிறந்த ஆவணப்படம்

என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது

படம் : கக்கூஸ்

இயக்கம் : திவ்யபாரதி

 

சிறந்த குறும்படம்

பா.ராமச்சந்திரன் நினைவு விருது

படம் : நி ஸ ரீ ஸ

இயக்கம் : மதன்

 

த.மு.எ.க.ச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்

 

மொழி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூல்

நூல் : சங்கப்பனுவல்கள் ' தொகுப்பு மரபு - திணை மரபு

ஆசிரியர் : சுஜா சுயம்பு

வெளியீடு : சந்தியா பதிப்பகம்

 

சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல்

நூல் : வித்தைக்காரச்சிறுமி

ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன்

வெளியீடு : வானம் பதிப்பகம்

 

நாட்டுப்புறக் கலைச்சுடர் விருதுகள்

 

2017-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்

நினைவில் வாழும் தஞ்சை ரெங்கராஜன்

தப்பாட்டக் கலைஞர்

 

2018-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்

தென்காசி கணேசன்

மகுடம் இசைக்கலைஞர்

 

இவ்விருதுகளைப் பெறும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 ரொக்கத் தொகையுடன் வாழ்த்துக் கேடயங்களும் வரும் டிசம்பர் 9-ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன.