வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (27/11/2018)

டாப் 10 டூ-வீலர்கள்! - முன்னிலையில் ஆக்டிவா

ந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 டூ வீலர்கள் விற்பனையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 20,53,495 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது செப்டம்பர் மாதத்தைவிட குறைவானது. 

டூ வீலர்கள்

அக்டோபரில் விற்பனையான டாப் 10 டூ வீலர்களில் அதிகபட்சமாக 2,68,377 வாகனங்கள் விற்பனையாகி ஹீரோ ஸ்ப்ளெண்டர் முதலிடத்தில் உள்ளது. செப்டம்பர் மாதத்தைவிட 22,549 வாகனங்கள் குறைவாக விற்பனையான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தில் இருந்தாலும், இரு சக்கர வாகன விற்பனையில் 2,62,260 வாகனங்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஹீரோ HF டீலக்ஸ் 2,00,312 வாகனங்களுடன் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் இருக்கும் டி.வி.எஸ் ஜூபிட்டரில் 1,02,132 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் ஏழாவது இடத்தில் இருந்த பஜாஜ் சிடி 100 அக்டோபரில் 93,676 வாகனங்கள் விற்பனையாகி ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது. 

பஜாஜ் சிடி 100

தொடர்ந்து ஹோண்டா சிபி ஷைன் (91,319) ஆறாவது இடத்திலும், ஹீரோ பேஷன் (84,870) ஏழாவது இடத்திலும், டிவிஎஸ் XL சூப்பர் (82,357) எட்டாவது இடத்திலும் ஹீரோ கிளாமர் (80,627) ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. செப்டம்பரில் எட்டாவது இடத்தில் இருந்த பஜாஜ் பிளாட்டினா (74,064) தற்போது பத்தாவது இடத்திலும் உள்ளது. 

ஸ்கூட்டர் விற்பனையில் எப்போதும் போல ஹோண்டா ஆக்டிவா 2,62,260 வாகனங்கள் விற்பனையாகி முதலிடத்திலேயே உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரிலியா SR 150 மாடல் விற்பனையில் 409.09 சதவிகித விற்பனையானது அதிகரித்துள்ளது. அதேபோல், டிவிஎஸ் Redeon மாடலில் 59.05 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

டூ-வீலர்கள்

பஜாஜ் பல்சரின் விற்பனையானது செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் 25,417 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. ஆனால், ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 மாடல் செப்டம்பர் மாதத்தைவிட 2,127 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் மாதம் விற்பனையான டாப் 10 டூ-வீலர்கள்! 

மாடல் 

யூனிட்
ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,68,377
ஹோண்டா ஆக்டிவா 2,62,260
ஹீரோ HF டீலக்ஸ் 2,00,312
டிவிஎஸ் ஜூபிட்டர் 1,02,132
பஜாஜ் சிடி 100 93,676
ஹோண்டா சிபி ஷைன் 91,319
ஹீரோ பேஷன் 84,870
டிவிஎஸ் XL சூப்பர் 82,357
ஹீரோ கிளாமர் 80,627
பஜாஜ் பிளாட்டினா 74,064

நீங்க எப்படி பீல் பண்றீங்க