நார்ட்டன் அட்லஸ் 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் என்ன ஸ்பெஷல்?! | Norton Unveils the Scrambler Atlas, Which Comes with a 650cc Engine!

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (29/11/2018)

கடைசி தொடர்பு:14:07 (29/11/2018)

நார்ட்டன் அட்லஸ் 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் என்ன ஸ்பெஷல்?!

Nomad & Ranger பைக்குகளில் இருப்பது 650சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, DOHC இன்ஜின். இது 84bhp பவர் மற்றும் 6.4kgm டார்க்கை வெளிப்படுத்துகின்றன.

லகளவில் தற்போது டூ-வீலர் செக்மென்ட்டில் கம்பேக் சீஸன் போலும்! இந்தியாவில் ஜாவா என்றால், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. இதே ட்ரெண்ட்டைப் பின்பற்றி, தனது புகழ்பெற்ற அட்லஸ் பிராண்டை ஐரோப்பிய பைக் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது, பிரிட்டனைச் சேர்ந்த நார்டன் நிறுவனம். பிரிட்டனில் நடைபெற்ற 2018 மோட்டார் சைக்கிள் லைவ் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இவை, பிரிட்டன் - அமெரிக்கா - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக விற்பனைக்கு வரும் எனச் சொல்லப்படுகிறது. ஆன் ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற Nomad & ஆஃப் ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற Ranger எனும் இரு ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள், அட்லஸ் பிராண்டின் கீழ் வெளிவந்திருக்கின்றன. 

டிசைன், வசதிகள்

Atlas

LED ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர்கள், தட்டையான சிங்கிள் பீஸ் சீட், காம்பேக்ட் Fenders - 2 Into 1 எக்ஸாஸ்ட், 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேம், இரட்டை டயல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இரண்டுக்குமே பொதுவானதாக இருக்கின்றன. தாழ்வான ஹேண்டில்பார் கொண்டிருக்கும் Nomad உடன் ஒப்பிடும்போது, Ranger பைக்கில் Fly ஸ்க்ரீன், ஹெட்லைட் Guard, Braces உடனான தடிமனான ஹேண்டில்பார், Sump Guard, பறவையின் அலகு போன்ற முன்பக்க மட்கார்டு ஆகியவை கூடுதலாக இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி இரு பைக்குகளின் டிசைனும் நீட்டாக உள்ளன. 

இன்ஜின், சஸ்பென்ஷன்

அட்லஸ்

Nomad & Ranger பைக்குகளில் இருப்பது 650சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, DOHC இன்ஜின். இது 84bhp பவர் மற்றும் 6.4kgm டார்க்கை வெளிப்படுத்துகின்றன என்றாலும், வால்வ் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல இவற்றில் இருப்பது Roadholder நிறுவனத்தின் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய USD ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப்தான் என்றாலும், Nomad பைக்கில் 150மிமீ வீல் டிராவல் - Avon Trailrider டயர்கள் இருந்தால், Ranger பைக்கில் 200மிமீ வீல் டிராவல் - Avon Trekrider டயர்கள் இருக்கின்றன. மற்றபடி ஸ்போக் வீல்கள், முன்பக்க இரட்டை 320 மிமீ பிரெம்போ ரேடியல் டிஸ்க் பிரேக், பின்பக்க 245 மிமீ பிரெம்போ டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ், 2 மோடு டிராக்‌ஷன் கன்ட்ரோல் என மெக்கானிக்கல் பாகங்கள் ஒன்றுதான். இதில் ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்யமுடியும் என்பது பெரிய ப்ளஸ்.

கலர் ஆப்ஷன், டயர்கள்

Atlas

ஆன்ரோடு பயன்பாட்டுக்கான Nomad பைக்கின் சீட் உயரம் 824மிமீ என்பதுடன், முன்பக்கத்தில் 110/80 R18 டயர் - பின்பக்கத்தில் 180/55 R17 டயர் இருக்கிறது. இதுவே ஆஃப் ரோடு பயன்பாட்டுக்கான Ranger பைக்கின் சீட் உயரம் 867மிமீ என்பதுடன், முன்பக்கத்தில் 120/70 R19 டயர் - பின்பக்கத்தில் 170/60 R17 டயர் உள்ளது. 178 கிலோ எடையுள்ள இந்த பைக்குகள், 5 கலர்களில் (கிரே, சில்வர், சிவப்பு, கறுப்பு, வெள்ளை) கிடைக்கின்றன. 

விலை, தயாரிப்பு

Atlas

மொத்தம் 500 பைக்குகள் மட்டுமே (Nomad & Ranger தலா 250) தயாரிக்கப்பட உள்ள இந்த ஸ்க்ராம்ப்ளர்கள், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகின்றன. இந்திய மதிப்பில் Nomad பைக்கின் விலை 9.22 லட்ச ரூபாய் எனவும், Ranger பைக்கின் விலை 11.07 லட்ச ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2019 முதலாக இவற்றின் டெலிவரிகள் தொடங்கும் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. மோட்டோராயல் நிறுவனம் இந்தியாவில் நார்ட்டன் தயாரிப்புகளில் சிலவற்றை இந்தியாவில் விற்பனை செய்கிறது. என்றாலும் அட்லஸ் பைக்கின் குறைவான உற்பத்தி எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இது இந்தியாவுக்கு வருமா என்பது சந்தேகமே.

ஆனால், இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் தயாரிக்கப்படும் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, மோட்டோராயலுக்குச் சொந்தமாக  அஹமத் நகரில் இருக்கும் பைக் தொழிற்சாலையிலிருந்து விலைகுறைவான மாடல்கள் வெளிவருவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கு நாம் 2019-ம் ஆண்டு இறுதிவரை காத்திருக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close