அஜித் to 'சீக்ரெட் டச்' - 3 நிமிடத்தில் ஆனந்த விகடன் 10 அம்சங்கள் | highlights of this week anandha vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:05 (29/11/2018)

அஜித் to 'சீக்ரெட் டச்' - 3 நிமிடத்தில் ஆனந்த விகடன் 10 அம்சங்கள்

இந்த இதழ்  ஆனந்த விகடன்: https://bit.ly/2rbSS7W

 

அஜித்தின் வித்தியாசமான கதாபாத்திரம், நயன்தாராவின் நடிப்புக்குத் தீனிபோடும் கதாபாத்திரம் உள்ளிட்ட 'விஸ்வாசம்' எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன், விஜய் படத்தை இயக்கும் ஐடியா மற்றும் தன் ரசிகர்கள் உடனான அஜித்தின் அக்கறையை வெளிப்படுத்தும் சம்பவம் என - 'வெளியே வீரம்... உள்ளே வெள்ளந்தி... 'தூக்குதுரை' அஜித் - எக்ஸ்க்ளூசிவ் 'விஸ்வாசம்' - நேர்காணல் முழுவதுமே சுவாரசியங்களைத் தெளிக்கிறார் இயக்குநர் சிவா.

கருணாநிதி இல்லாத 100 நாள்களைக் கடந்திருக்கிறது தமிழ்நாடு. அரை நூற்றாண்டுக்கும் மேல் அரசியல் பரபரப்போடு இருந்த கோபாலபுரம் 4-வது தெரு, 15-ம் எண் வீடு, இப்போது எப்படி இருக்கிறது? விடைதேடிப் புறப்பட்டபோது 'ஷாக்' தகவலைச் சொன்னார்கள் மின்சார வாரிய அதிகாரிகள். அத்துடன், கருணாநிதியிடம் செயலாளராக இருந்த சண்முகநாதன் கூறிய உணர்வுபூர்வ தகவல்களையும் உள்ளடக்கியதே 'கருணாநிதி இல்லாத கோபாலபுரம்!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை.

தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் 5,000-க்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது - ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக - முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது என்ற நிஜத்தை அரசின் அணுகுமுறை மற்றும் புள்ளி விவரத்துடன் அழுத்தமாக குரல் கொடுக்கிறது, 'இவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்?' எனும் சிறப்புப் பார்வை.

சில்வர் தட்டு சவுண்டுக்காக தேடி ரஹ்மான் எனும் சிறுவனைக் கண்டுபிடித்த தருணம் முதல் தன் புதிய படத்துக்காக இரண்டு ஆண்டுகளாக ரஹ்மான் வேலை பார்த்து வருவதன் பின்னணி வரை... ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், தான் இயக்கி வரும் 'சர்வம் தாளமயம்' சிறப்புகள் குறித்து சொல்லும் "ரஹ்மான் இசையில் என்னோட ட்யூன்!" இயக்குநர் ராஜீவ் மேனனின் பேட்டி ஓர் இதமான பகிர்வு அனுபவம். 

வீரய்யன் மீது எத்தனையோ பொய்வழக்குகள், சிறைவாழ்க்கை. எமெர்ஜென்சி காலத்தில் தலைமறைவு வாழ்க்கை. நெருக்கடிநிலை அகற்றப்பட்டு, ஒருநாள் கட்சிக்கூட்டம் முடிந்து பகலில் வீட்டுக்குச் சென்றார் வீரய்யன். அவரது நான்கு வயது மகள் செம்மலர், கொல்லையில் இருந்த அம்மாவிடம் போய், “யாரோ வந்திருக்கிறார்கள்” என்றாள். இது வீரய்யனின் போராட்ட வாழ்க்கைக்கான சிறுசான்று... - வீரய்யன் எனும் பாட்டாளி வர்க்க நாயகனின் மலைக்கத்தக்க வாழ்க்கையை நமக்குக் காட்டுகிறது 'பயணம் முடிந்தது; பாதை நீள்கிறது!' எனும் அஞ்சலிக் கட்டுரை.

இந்த இதழ்  ஆனந்த விகடன்: https://bit.ly/2rbSS7W

...தங்கபஸ்பம் போல் அல்லாமல், தங்கத்தோடு மூலிகைகளைப் பயன்படுத்துகிறோம். தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகங்களையும் அதில் பயன்படுத்துவதில்லை. அதனால் 100% நச்சு இல்லை... - பசுமை நானோ தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கட்டேஷ் வி.கட்டி. மருத்துவத் துறையை இயற்கையின் வசம் திருப்பும் முயற்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். ரசாயனங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தாமல் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளார். அவர் கூறிய வியத்தகு மருத்துவ தகவல்களைத் தருகிறது 'தங்கத்தில் இருந்து மருந்து!' எனும் சந்திப்புக் கட்டுரை.

ஹோட்டலும் ஹோட்டல் நிமித்தம் எல்லாவற்றுக்குமான தீர்வாக வந்ததுதான் ஓயோ (OYO) ரூம்ஸ். இதன் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் (Ritesh Agarwal) இந்த ஐடியாவை யோசித்தபோது அவர் வயது 17. அதைச் சாத்தியப்படுத்தியபோது அவர் வயது 18. இளம் வயதில் கோடீஸ்வரன் ஆனவர் ரித்தேஷ். 'கேம் சேஞ்சர்ஸ் - OYO' தவறவிடக் கூடாத ஸ்டார்ட் அப் வெற்றிக் கதை!

விசாலமான டைனிங், மனதுக்குகந்த அமைதி, கனிவான உபசரிப்பு, நிதானமாக, தொந்தரவில்லாமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடுகிற சூழல்... கூடவே ருசியான நல்லுணவு... இப்படி ஓர் உணவகம் வாய்த்தால் அது நற்தருணம். சென்னை, பெசன்ட் நகர், முதல் பிரதான சாலையில், மின்சார வாரிய அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் நெல்வேலி சைவ உணவகம் இப்படியான ஒரு நல்லனுபவத்தைத் தருகிறது. உணவகத்தின் சூழலே புத்துணர்வு அளிக்கும் வகையில் இருக்கிறது என்பதை விவரிக்கிறது 'சோறு முக்கியம் பாஸ்!' தொடரின் இந்த வார அத்தியாயம்.  

"சண்டே எங்களுக்கு ஃபேமிலி டே. அன்னைக்கு எங்க பாட்டி வீட்டுக்கு எல்லோரும் வந்தே ஆகணும்னு ரூல். இல்லைனா, முதல் ஆளா கோபப்படுறது ரஹ்மான் மாமாதான். ஃபேமிலி கெட்-டு-கெதரை ஆரம்பிச்சதும் அவர்தான்." - 'காற்றின்  மொழி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் ஏ.ஹெச்.காஷிஃப். ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை பாத்திமாவின் மகன். "நாங்க மியூசிக் ஃபேமிலி!" எனும் அவர் உடனான சந்திப்பு சொல்லும் தகவல்கள் ஏராளம். 

...நான் இன்னும் குரலை உயர்த்தி, 'இது யாரோட குழந்தை? குழந்தைகளைக் கடத்துறவங்களா நீங்க?'ன்னு கேட்டதும், ஏழெட்டுப் பேர் எங்கிருந்து வந்தாங்கன்னே தெரியலை, எல்லாருமே ரெளடிங்க. ரெண்டு பிள்ளைகளையும் கையில் இறுக்கமா பிடிச்சுக்கிட்டேன்... - என சென்னையில் தனக்கு நேர்ந்த பதறவைக்கும் சம்பவத்தை விவரிக்கிறார் குழந்தைகள் பாதுகாப்பு சமூக ஆர்வலர் கன்யா. அத்துடன், ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடப்பது தொடங்கி குட் டச், பேட் டச் உடன் 'சீக்ரெட் டச்' பற்றியும் விரிவாக சொல்கிறார். ஆம், "குழந்தைகளைப் பாதுகாப்போம்!" தவறவிடக் கூடாத சந்திப்புக் கட்டுரை. 

 

இந்த வார ஆனந்த  விகடன் இதழை வாங்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2P9u2Pi


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close