Published:Updated:

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!
எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

இந்த இதழ்  ஜூனியர் விகடன்: https://bit.ly/2rdq6Un

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

``ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் கொல்லைப்புறமாக முயற்சி செய்யுமானால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்..." - ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் அணுகுமுறையைக் காட்டுகிறது 'ஸ்டெர்லைட் 2.0: தமிழக அரசு... வில்லனா, ஹீரோவா?' செய்திக் கட்டுரை.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

திரும்பி வந்த அமைச்சர்... திட்டித்தீர்த்த மக்கள்! இருளில் தவிக்கும் புதுக்கோட்டை! ``மறுபடியும் வீட்டை இடிச்சிட்டா போட்டோ பிடிக்க முடியும்?" - இயல்பு நிலை திரும்பாத கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் கோபத்தைக் கூட்டியிருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி ஆறுதல். ``காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?" என்ற மக்களின் கொந்தளிப்புடன் கஜா களநிலவரம் சொல்கிறது நேரடி ரிப்போர்ட்.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

``தி.மு.க கூட்டணியைப் பலவீனப்படுத்த பி.ஜே.பி முயற்சி செய்கிறது என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?"  ``டி.டி.வி.தினகரன் உடனான சந்திப்பு..." ``கூட்டணிக் கட்சிகள் குறித்து தி.மு.க பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறதே?" - தமிழகத்தில் கூட்டணிக் குளறுபடிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில், 'தி.மு.க தனித்து நின்றால்... அது விஷப்பரீட்சை! - எச்சரிக்கும் திருமாவளவன்' பேட்டி மிக முக்கியமானது.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

திருமா, வைகோ இருவருமே ஸ்டாலினைச் சந்தித்தபோது நடந்தவை என்ன? நம்மைச் சிதறடிக்க வாய்ப்பு கொடுக்கலாமா? - துரைமுருகனிடம் கடுகடுத்த ஸ்டாலின்! வைகோ அறிவாலயம் வந்தபோது நடந்த சில சுவாரஸ்யங்கள்... அரசியல் களத்துக்குள் நடப்பதை அப்படியே விவரிக்கிறார் கழுகார்.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

இலங்கையில் போர்க் காலம் தொடங்கி இப்போதுவரை, பல்லாயிரக்கணக்கில் மக்கள் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களின் நிலை என்ன? இலங்கை அரசியல் சூழல் மோசமாக இருக்கும் நிலையில், அங்கிருக்கும் ஈழ மக்களின் இப்போதைய நிலை என்ன? - பல அதிர்வுத் தகவல்களைத் தருகிறது, ``இலங்கையில் இனப்போர் தொடர்கிறது!" எனும் ஈழ மண்ணில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சண்மாஸ்டர் பேட்டி.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில், மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறதா? குடிநீருக்காக மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டுகிறோம் என்கிறதே கர்நாடக அரசு? தமிழகம் சார்பில் ராசி மணல் என்கிற இடத்தில் புதிய அணையைக் கட்டுவது இதற்குத் தீர்வாக அமையும் என்று சிலர் சொல்வது பற்றி? - விரிவான புரிதல் தரும் 'காவிரி மேலாண்மை வாரியத்தை காலில் போட்டு மிதிக்கிறது மத்திய அரசு!' - பொறியாளர் வீரப்பன் விளாசல் பேட்டி.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, 'டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. அந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் அனிதாவின் தந்தை. அவர் சொல்லும் காரணத்தையும், அனிதா குடும்பத்தின் தற்போதைய நிலையையும் விவரிக்கிறது. 'அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை' பேட்டி.

எட்டுத் திக்கும் அலசும் ஜூனியர் விகடனின் 8 மேட்டர்கள்!

'அ.தி.மு.க' அஜித் - 'தி.மு.க' சமுத்திரக்கனி... தமிழக அரசியலில் குழப்பக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. வழக்கம்போல வைகோதான் வைரல். கூட்டணி முதல் ஆட்சியைப் பிடிப்பது வரையிலான வேலைகள் சுளுவாக முடிய கட்சிகள் சிலபல நடிகர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என யோசனை சொல்லி அரசியல் அலப்பறை செய்கிறார் ஐடியா அய்யனாரு!

இந்த வார ஜூனியர்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:   https://bit.ly/2zzNKyV