வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:39 (04/12/2018)

வருமானம் கூட்ட நாணயம் விகடனின் 9 வழிகாட்டுதல்கள்! 

இந்த இதழ்  நாணயம் விகடன்: https://bit.ly/2Ed0wak

இளம் வயதிலேயே பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தாலும்கூட, நிதிச் சேமிப்பு குறித்த விவேகமோ, சேமிப்பு மற்றும் முதலீடு குறித்தோ சரியாக சிந்திப்பதில்லை. எனவே, ஒருவர் தனது இளமைக்கால நிதி வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய ஆறு தவறுகளின் பட்டியலை 'புதிய வேலை... கைநிறைய சம்பளம்... இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய 6 நிதித் தவறுகள்!" எனும் கவர் ஸ்டோரி எளிதாகவும் விரிவாகவும் தருகிறது.

வருமானத்திற்கு ஏற்ப வரியைச் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால், அந்த வரியை ஓரளவுக்கு குறைத்துச் செலுத்த மத்திய அரசாங்கம் நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறொன்றும் இல்லை. இதை அறியாத பலர், இந்த வருமான வரி சலுகைகளை அனுபவிக்காமலேயே இருந்துவிடுகின்றனர். 'வரியைச் சேமிக்கலாம்... பணக்காரர் ஆகலாம்!' எனும் ஆலோசனைக் கட்டுரை வருமான வரியை சேமிக்க சில திட்டங்களுடன் எளிதாக வழிகாட்டுகிறது. 

அரசியல், பொருளாதாரம், மோசடி, தன்னை மிஞ்சி யாருமில்லை என நினைக்கும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், கொஞ்சம் காதல் என சமகால பொருளாதார, அரசியல் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான ஒரு நாவல்தான் 'டோண்ட் டெல் தி கவர்னர்'. இதன் சிறப்பு அம்சங்களைத் தருகிறது 'சொல்லாதீர்கள் கவர்னரிடம்!' எனும் கட்டுரை.

வாழ்க்கையில் சின்னச்சின்ன நல்ல பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் மூலம், மிகப்பெரிய வெற்றியை அடையமுடியும் என்கிறார்கள் பெரியவர்கள். ஜேம்ஸ் க்ளியர் என்பவர் எழுதிய 'அடாமிக் ஹேபிட்ஸ்' எனும் புத்தகம் இதுகுறித்துதான் விளக்குகிறது. அந்தப் புத்தகத்தின் சிறப்புக் குறிப்புகளை மேற்கோள் காட்டும் 'பெரிய வெற்றியைத் தரும் சின்னச்சின்ன பழக்கங்கள்!' நூல் அறிமுகப் பார்வையாலேயே பலன் பெறலாம். 

வரலாறு காணாத அளவுக்கு (ரூ.74.48) வீழ்ச்சி அடைந்த பிறகு, இந்திய ரூபாய் இழந்த மதிப்பை, கடந்த மூன்று வாரங்களில் ஓரளவுக்கு (சுமார் ரூ.4) மீட்டெடுத்துள்ளது. மீட்சிக்கான காரணங்களையும், ரூபாய் மீட்சிப் பயணம் தொடருமா என்பது பற்றியும் தெளிவுபடச் சொல்கிறது 'ரூபாயின் மீட்சிப் பயணம் தொடருமா?' எனும் அலசல். 

இந்த இதழ்  நாணயம் விகடன்: https://bit.ly/2Ed0wak

பங்கு சார்ந்த முதலீடுகளில் கால்நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவின் தலைவருமான ஆர்.ஸ்ரீனிவாசன் நாணயம் விகடனுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். 'சந்தை ஏற்ற இறக்கம்... ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு ஏற்றதா?' எனும் அந்தப் பேட்டி மூலம் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு குறித்த தற்போதைய சூழலையும் தெளிவையும் அறியலாம். 

வளரும் நாடுகளின் சந்தை எப்படியுள்ளது? இந்திய எண்ணெய் நிறுவனப் பங்குகள் ஏற்றமடைந்து காணப்படுகின்றனவே? நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் டிசம்பரில் எப்படியிருக்கும்? யெஸ் பேங்க் பங்குகள் வீழ்ச்சியடைந்ததற்கு என்ன காரணம்? - பங்குச்சந்தை நிலவரம் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை தருகிறார் ஷேர்லக். 

"சந்தையின் போக்கு தொடர்ந்து உறுதியாக இருப்பதால், வரும் வாரத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையைத் தேர்வு செய்வதுதான் நல்லது. நீண்ட கால முதலீட்டுக்கான  பங்குகளை அப்படியே வைத்திருந்தாலும், ஸ்டாப்லாஸில் உறுதியான நிலைப்பாட்டைக் கைவிட்டு விடாதீர்கள்" - பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புள்ளி விவரத்துடன் வழிகாட்டுகிறது 'பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!' பகுதி. 

பிசினஸில் வெற்றி என்பது இது போலத்தான். எதைச் செய்யக்கூடாதோ, அதை நாம் சிரத்தையாகச் செய்வதால், தோல்வி என்பது நம்மைத் தேடி வருகிறது. ஒரு தொழில்முனைவருக்கு ஐந்துவிதமான விஷயங்கள் இருக்கவேண்டும். அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன என்பதை விளக்கிச் சொல்கிறது 'பிசினஸில் நம்மை ஜெயிக்க வைக்கும் 5 விஷயங்கள்!' எனும் தொடர் பகுதி. 

இந்த வார நாணயம்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:     https://bit.ly/2DUZUFz