R Muthu Kumar

கருணாநிதி மறைவுக்குப் பிறகு தயாளு அம்மாளின் முதல் அதிகாரபூர்வப் படம். நெற்றியில் குங்குமம்.

Rajagopal Subramaniam

எனக்கென்னவோ இந்த டி.வி சேனல்காரங்க மேலதான் சந்தேகமா இருக்கு. ஏதாச்சும் தலைப்பு பஞ்சம் வர்றப்ப இது மாதிரி ஆரம்பிக்கச் சொல்லி, ‘விஷால் கட்சி ஆரம்பித்ததால் தி.மு.க-வுக்கு பாதிப்பா’, ‘இடதுசாரிகளின் இடத்தை விஷால் நிரப்புவாரா’ன்னு டாபிக் பிடிக்கிறதுக்காகவே ஏற்பாடு செய்வாங்களோ!

Saba Sabastin Sabas

இந்தியா முழுமைக்கும் காவி பெயின்ட் அடிக்கும் மோடி அரசைத் தூக்கி அடிக்க வா - தளபதி ஸ்டாலின்

#மொதல்ல பொன்முடியும் ஜெ.அன்பழகனும் அடிச்சுக்காம பாத்துகோங்க தலைவரே :)

மு.சே.கலைச்செல்வன்

‘‘இன்னும் யார் யாரெல்லாம்டா தமிழ்நாட்டுல கட்சி ஆரம்பிக்கல?’’

‘‘புரோட்டா சூரி மாமாவும், தமிழ்ப்படம் சிவா சித்தப்பாவும்!’’

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து கூறிவிட்டனர். எனக்கு வாழ்த்தும் வயதில்லை. அன்பைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் ஒன்று தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது. இந்திரா மறைந்து ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைவரானபோது, ‘‘காங்கிரஸ் ஜனநாயக ரீதியான இயக்கமல்ல; அங்கு எதுவும் நடக்கலாம். திமுக அப்படியல்ல’’ என்று ஸ்டாலின் ஒரு பேட்டி கொடுத்தார். ‘ராஜீவ் போல நீங்களும் தி.மு.க-வின் தலைவராக வரும் வாய்ப்பு உள்ளதா?’ என்ற கேள்விக்கு அன்று அவர் இவ்வாறு கூறியிருந்தார். காங். நிலைதான் இன்று தி.மு.க-வில் திரும்பியுள்ளது.

காலம் மாறுகிறது. காட்சிதான் மாறவில்லை. ஸ்டாலின் பேச்சில் ஓர் அரவணைப்பு தெரிகிறது. மாற்றம் தி.மு.க-வில் வரலாம். அவரிடம் ஓர் அன்பு வேண்டுகோள். தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றபோது, அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவரின் மனைவி ராணி அம்மையார் விரும்பினார். அதற்கு அண்ணாதுரையிடம் அனுமதியும் கோரினார். அண்ணா இதயம் அதை ஏற்கவில்லை. மறுத்துவிட்டுத் தனியே புறப்பட்டார் அண்ணா. ஆனாலும், அவர் மனைவியின் மனம் அடங்கவில்லை. டிரைவரை அழைத்து அரியணை நிகழ்ச்சிக்கு விரைந்தார். அங்கே கூட்டம் அலைகடல் போல் நின்றது. ஏதோ சின்ன விழாவாக இருக்கும் என எடைபோட்ட ராணி அம்மையாருக்கு அதில் ஆச்சர்யம். கூட்டத்தின் ஒதுக்குப்புறமாக நின்று பார்த்துவிட்டு அவர் வீட்டுக்குத் திரும்பினார்.

இப்படி அதிகாரத்தை விட்டுத் தள்ளியே குடும்பத்தை வைத்தார் அண்ணா. அந்த இதயம் இடம் மாறி மு.க-விடம் வந்ததாகவும், அந்த இதயம்தான் இப்போது தன்னிடம் இருப்பதாகவும், தி.மு.க தலைவர் பதவியேற்பில் கூறியுள்ளார் ஸ்டாலின். நான் விரும்புவதும் அந்த அண்ணாவின் இதயத்தைத்தான். அதை நீங்கள் செய்தால் தி.மு.க அடுத்த ஜென்மத்திலும் ஆட்சியில் இருக்கும், செய்வீர்களா?

@sultan_Twitz

‘உடலை உறுதியாக்குங்கள்...’

- மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

‘‘ஆஹா. புதுசா ஏதோ திட்டம் ரெடி பண்ணிட்டாங்க போல... இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது குருநாதா!’’

@mekalapugazh

பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் புதிய நோட்டுகளாகத் தருவதுதான் திட்டமென்றால், ஒரு வருடம் காலமெடுத்து நிதானமாகச் செய்திருக்கலாமே. எதற்கு பணமதிப்பிழப்பு டேபிளையெல்லாம் டைவ் அடித்து... எட்டி உதைத்து...

@Kannan_Twitz

என்னிடம் கார் மட்டுமே உள்ளது, சொந்தமாக வீடுகூட கிடையாது - விஷால்

# தட் ‘நானும் ஏழைத்தாயின் மகன்தான்’ மொமன்ட்.

@sultan_Twitz

தமிழகத்தில் பா.ஜ.க வீழ்ந்து கிடக்கிறது - திருநாவுக்கரசர்

# ‘‘தலைவரே, நம்ம வண்டில நாலு டயருமே பஞ்சர்!’’

@Kozhiyaar

திருமணம் மன நிம்மதியைத் தரும் என்று எந்த அளவிற்கு நம்பி ஏமாந்தேனோ, அதே அளவு பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் பலன் தரும் என்று நம்பி ஏமாந்திருக்கிறேன்!!!

@Tamil_Typist

தமிழ்நாட்டில் சேலம் கலெக்டர் பெயர் மட்டுமே எனக்குத் தெரியும். மத்த மாவட்டங்கள்ல கலெக்டர்கள் இருக்காங்களான்னுகூட தெரியாது!

# Power of Publicity

@19SIVA25

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் ஸ்டாலின் – நாஞ்சில் சம்பத்

# கருப்பன் குசும்பன்... கார் கேட்குறாப்ள... சைக்கிள்கூட இங்க தேறாது, மாற்றுப் பாதையில் செல்லவும்!

@nellaiseemai

கேரளாவைப் போல வெள்ளம் வந்தால் சமாளிக்கத் தயார் - எடப்பாடி பழனிசாமி

‘‘எப்படிச் சொல்றீங்க?’’

‘‘ஏற்கெனவே நிறைய ஸ்டிக்கர் அடிச்சு வச்சிட்டோம்!’’

@gips_twitz

மக்கள் நல இயக்கம் அரசியலை நோக்கிச் செல்லும் இயக்கமல்ல; மக்கள் பணி செய்யவே இந்தப் புதிய அமைப்பு - நடிகர் விஷால்

# மக்கள் பணின்னா... மளிகைக்கடைக்குப் போகச் சொன்னா போயிட்டு வருவீங்களா ப்ரோ!

@Thaadikkaran

ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பெட்ரோல் விலையையும் சேர்த்துக்கொள்ளலாம்!

@gips_twitz

500 கிலோ எடையுள்ள குண்டுகள், கட்டடப் பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன - செய்தி
# இந்நேரம் சீமான் இத வச்சு பெரிய கதையே ரெடி பண்ணிருப்பாரு!

@senthilvel_1969

அமித் ஷா பாதுகாப்புக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள்?
‘சொல்ல முடியாது!’
பிரதமருடன் பயணித்த தொழிலதிபர்கள் விவரங்கள்?
‘தர முடியாது!’
ரஃபேல் விமான ஒப்பந்த விவரங்கள்?
‘தர முடியாது!’
மோடிஜி என்னதான் படித்துள்ளார்?