வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (05/12/2018)

கடைசி தொடர்பு:14:22 (06/12/2018)

கிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு வேணுமா? #MaxLovesChristmas

ஹோ ஹோ ஹோ... கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. கிறிஸ்துமஸ் என்றால் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமலா? அன்புப் பரிசும் அன்பையே பரிசாகவும் தரும் கொழுக் மொழுக் வெள்ளைத் தாடிக்கார குஷியான கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏது நிறைவு? உலகம் முழுவதும் உள்ள நல்லுள்ளம் படைத்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் இரவன்று ரகசியகமாக கிறிஸ்துமஸ் தாத்தா வந்து பரிசு தருவார் என்பது நம்பிக்கை. இப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வரும்வரை நாம் காத்திருக்க வேண்டாம், நாமே கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவாக்கி பரிசுகள் பெறலாம்!

பரிசு பெற என்ன செய்ய வேண்டும்?

வருகிற சுட்டி விகடன் இதழுடன் இலவச இணைப்பாக வரும் டூ இட் யுவர்செல்ப் (DIY) கிறிஸ்துமஸ் தாத்தா கிட்-ஜக் கேட்டு வாங்குங்கள். கிட்-இல் உள்ள அறிவுறுத்தல்படி கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையை செய்திடுங்கள். நீங்களே கைப்பட செய்த பொம்மையுடன் ஒரு போட்டோ எடுத்து, அதை பேஸ்புக்கில் பதிவிடுங்கள். பதிவிடும்போது மறக்காமல், #MaxLovesChristmas எனும் ஹேஷ்டேக் உடன் @maxfashions பேஸ்புக் பக்கத்தை டேக் செய்து பதிவிடுங்கள். நீங்கள் செய்த கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையோ அல்லது பொம்மையையோ எடுத்துச் சென்று அருகிலுள்ள மேக்ஸ் ஃபேஷன்ஸ் ஸ்டோர்-இல் காட்டி நிச்சயப் பரிசுகளை வெல்லலாம்!

மேலும், சென்னையிலுள்ள Max Fashion Store-களில், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையுடன் நேரில் வந்து பரிசு பெரும் குழந்தைகளில், முதல் 500 குழந்தைகளுக்கு, டிசம்பர் 23 அன்று வடபழனி Forum Vijaya Mall-இல் 'MAD' Rob நடத்தும் DIY Workshop-இல் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது Max. சுட்டிகளே, இன்னும் என்ன தாமதம்? கிறிஸ்துமஸ் தாத்தா தரும் பரிசைப் பெற முந்துங்கள்!

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க