சினிமாவும் அரசியலும்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 9 அம்சங்கள்! | highlights of this week ananda vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (06/12/2018)

கடைசி தொடர்பு:15:23 (06/12/2018)

சினிமாவும் அரசியலும்: 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடன் 9 அம்சங்கள்!

இந்த இதழ் ஆனந்த விகடன் படிக்க: https://bit.ly/2Pp0NIq

``படம் முழுக்க விஜய் சேதுபதி, த்ரிஷா இரண்டு பேர்தான் வருகிறார்கள். முதல்முறையே அவர்களைக் காட்டிவிட்டால், அடுத்து சொல்வதற்கு எதுவும் இருக்காதே? அதற்காக சிறிய மேஜிக் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் நீங்கள் பார்த்த '96' போஸ்டர் டிசைன்கள்." - `ஆரண்ய காண்டம்' தொடங்கி, `சர்கார்', `செக்கச் சிவந்த வானம்' வரை தன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களால் அசத்தி வரும் கோபி பிரசன்னாவின் ``எனக்கும் கதை முக்கியம்!" எனும் சிறப்புப் பேட்டி தரும் தகவல்கள் வியக்கத்தக்கவை. 

``இங்க எல்லாமே அரசியல்தான். டி.வி, மிக்ஸியைப் பத்தி மட்டும் பேசுறது அரசியல் இல்ல. ஒரு ஜாதியைத் தூக்கிப் பேசறது;  இன்னொரு ஜாதியை இழிவுபடுத்தறது எல்லாமே அரசியல்தான். சினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு விஷயங்கள் போய்ச் சேரணும்." - விஜய் சேதுபதி

சீதக்காதி, '96' ராம், நிஜ வாழ்க்கையில் ஜானு என லேசாக தொடங்கும் விஜய் சேதுபதியின் பேட்டி, அரசியல் தொட்டவுடன் டாப் கியரில் பறக்கிறது. பின்னர் மீண்டும் பர்சனலுக்குள் நுழைந்து, ஆல்வேஸ் ஐ'ம் ஓகே பேபி என நிறைவடைகிறது. ``சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகள் வேலையில்லை!" - வெடிக்கும் விஜய்சேதுபதியின் நேர்காணலைத் தவறவிடாதீர்கள்.

விஜய் சேதுபதி

தேர்தலுக்காக முன்னெழுப்பப்படும் அரசியல் நாடகமா அல்லது மீண்டும் ரத்த ஆற்றை ஓடவைப்பதற்கான ஒத்திகையா? பா.ஜ.க. அரசுக்கு இந்துத்துவவாதிகள் கொடுக்கும் நெருக்கடியா அல்லது பா.ஜ.க-வும் பின்னணியில் இருந்து இந்த நாடகத்தை இயக்குகிறதா..? - உரிய பின்னணியுடன் சந்தேகங்களை எழுப்பி சில தெளிவுகளைத் தருகிறது 'மீண்டும் எழும் ராமர் அரசியல்!' அலசல் கட்டுரை.

இந்த இதழ் ஆனந்த விகடன் படிக்க: https://bit.ly/2Pp0NIq

``மேக்கேதாட்டூ அணை மூலமாகக் காவிரி நீர் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிட்டால், விவசாயிகள் தானாகவே தங்களுடைய கிராமங்களை விட்டு நிரந்தரமாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு கணக்கு போடுகிறது." - காவிரி டெல்டா மக்களின் எதிர்கால நம்பிக்கையை உடைத்தெறியும் விதமாக, கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டூவில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் பின்னணி அரசியலையும் விளைவுகளையும் ஆழமாக அலசுகிறது 'மேக்கேதாட்டூ... மீண்டும் துரோகம்!' செய்திக் கட்டுரை.

முந்தைய பாகம் `எந்திரனி'லிருந்த எமோஷனல் மற்றும் யதார்த்த அம்சங்கள், 2.0 படத்தில்... 404 Error - Not Found! இத்தனை தொழில்நுட்பங்கள் இருந்தாலும் கதையின் அடிப்படை குறித்தும், `இதை ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் என்று சொல்ல முடியுமா?' என்றும் எழும் கேள்விகள் க்ளைமாக்ஸில் பல்கிப்பெருகும் ரோபோக்களைவிட அதிகம். - ஆனாலும் பார்டருக்கு அதிகமாக பாஸ் மார்க் பெற்றது ஏன் என்பதை '2.0 - சினிமா விமர்சனம்' படித்து அறியலாம்.

அப்பா தியாகராஜன்: ``எதிர்காலத்துல எந்தமாதிரி படங்களைப் பண்ண ஆசைப்படுறீங்க?"
மகன் பிரசாந்த்: ``மொழிப் பாகுபாடு இல்லாம படம் பார்க்கிற ரசிகர்கள்தான் என் டார்கெட்."

மகன் பிரசாந்த்: ``உங்களுக்கு நடிகர் பிரசாந்த்தைப் பிடிக்குமா, மகன் பிரசாந்த்தைப் பிடிக்குமா?" 
அப்பா தியாகராஜன்: ``சினிமாவுல நடிக்கிற, என்கிட்ட நடிக்காத, மகன் பிரசாந்த்தைப் பிடிக்கும்." 

- தியாகராஜன் - பிரசாந்த்... சினிமா பிரபலங்களாக இவர்களிடம் பேசுவதைவிட, அப்பா - மகனாக அணுகியதால் புதிய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. ``வீட்டுக்குள்ளகூட அரசியல் பேசமாட்டோம்!" எனும் பேட்டியில் காணலாம்.

இந்த இதழ் ஆனந்த விகடன் படிக்க: https://bit.ly/2Pp0NIq

`பட்டுக்கோட்டையிலே பருப்பு விக்கையிலே' பாடலுக்கு அபாயகரமான அசைவுகள், `உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்' கவிதைக்கு ஓர் ஆணும் பெண்ணும் ஆடை நெகிழும் காட்சிகள் என்று ஏராளமான காட்சிப்பதிவுகள்... 'டிக்டொக்' வீடியோக்களில் பார்வையாளர்களும் சாதாரண மக்களே; கலைஞர்களும் சாதாரண மக்களே. இது ஒருவகையான ஜனநாயக வெளி. ஆனால், நம் சமூகம் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல் என்ன என்பதை அலசுகிறது 'ஜனநாயகமும்... சுயமோகமும்...' எனும் பார்வை. 

``கொசுவிரட்டி மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி. கொசுவிரட்டி கலந்த காற்றை சுவாசிப்பதால் மனிதனுக்கு நுரையீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. கொசு தப்பித்துவிடுகிறது; நாம் சிக்கிக்கொள்கிறோம்" - நம் பாதுகாப்பு, சூழலியல் சார்ந்து எளிமையான புரிதலைத் தருகிறது 'கொசுவை ஒழிக்க முடியுமா?' எனும் அலசல்.

க்விக்கர். ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ வாங்கவும் விற்கவும் நமக்கு உதவும் இணையதளம். இந்நிறுவனத்தின்  இன்றைய மதிப்பு 150 கோடி டாலருக்கும் மேல். இந்திய ரூபாயில் 10,000 கோடி. இந்த வளர்ச்சிக்கு உதவிய ஒரு ஜீபூம்பா இருக்கிறது. அது, சின்னச் சின்ன நிறுவனங்கள் பலவற்றை வாங்கியது... - 'கேம் சேஞ்சர்ஸ் - Quikr' வெற்றிக் கதை சொல்லும் சேதிகள் பல.

இவற்றுடன், இந்திரா செளந்தர்ராஜன் எழுதும் புதிய தொடர் 'இலையுதிர் காலம்', நம்மை அமைதிப்படுத்தும் 'அன்பே தவம்', தெறிக்கும் கார்ட்டூன், கரைக்கும் கவிதைகள், சிறுகதை, ஜோக்குகள், துணுக்குகள் என புரட்டப் புரட்ட புத்துணர்வு ததும்பும் இந்த வார ஆனந்த விகடன் - மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2UiJZGG


[X] Close

[X] Close