வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (06/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (06/12/2018)

மீண்டும் ரீகால்... யமஹா R3-க்கு வந்த சோதனை!

யமஹா தனது YZF-R3 பைக்கை மீண்டும் ரீகால் செய்துள்ளது. ரேடியேட்டர் ஹோஸ் பிரச்னை இருப்பதால் கூலன்ட் ஆயில் லீக் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறி பைக்கை ரீகால் செய்கிறார்கள். கூடவே ரேடியேட்டரில் வரும் ஸ்பிரிங் டார்ஷனையும் மாற்றி கொடுக்கிறார்களாம்.  

யமஹா R3

இந்தியாவில் மொத்தம் 1,874 பைக்குகள் ரீகால் செய்யப்படுகிறது. ரேடியேட்டர் ஹோஸ் கோளாறாக இருப்பதால் பைக் வாங்கிய சில நாள்களிலேயே ரேடியேட்டர் ஆயில் லீக் ஏற்படுகிறது என்ற புகார் தொடர்ந்துவர இந்த ரீகால் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவில் எந்த R3 பைக்கிடம் இருந்தும் இந்தப் புகார் வரவில்லை. இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவிலும் R3 பைக்கை ரீகால் செய்கிறோம் என்று யமஹா கூறியுள்ளது. 

YZF-R3

ஜூன் 2016-ன் போது க்ளட்ச் மற்றும் ஆயில் பம்ப் சரியில்லாத காரணத்தால் முதல் முறை ரீகால் செய்யப்பட்டது. பிறகு பிப்ரவரி 2017-ம் ஆண்டு பெட்ரோல் டேங்க் பிராக்கெட் மற்றும் மெயின் ஸ்விட்சு சப்-அசெம்ப்ளி சரியில்லை என்று ரீகால் செய்தார்கள். இது மூன்றாவது முறை.