தொழிலுக்கு வந்தனை செய்வோம்! - பிசினஸ் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நாணயம் விகடன் | Naanayam Vikatan Business star - 2018 award function

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (08/12/2018)

கடைசி தொடர்பு:19:49 (08/12/2018)

தொழிலுக்கு வந்தனை செய்வோம்! - பிசினஸ் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நாணயம் விகடன்

சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நாணயம் விகடனின் பிசினஸ் ஸ்டார் விருதுகள் - 2018 வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் - 2018 விருதுகள் வழங்கும் விழா

திறமைகளைத் தேடி மதிப்பளிப்பதில் விகடன் என்றைக்குமே பெருமைப்படும். அந்த வகையில் நாணயமான நாயகர்களுக்கு விருதளித்து கௌரவப்படுத்தும், நாணயம் விகடன் `பிசினஸ் ஸ்டார் - 2018’ விருதுகள் வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தொடங்கியது. விஜய் டிவி புகழ் ரம்யா தொகுத்து வழங்க, வாழ்நாள் சாதனையாளர், self made billionaire, ஸ்டார்ட் அப் ஸ்டார் உள்ளிட்ட 10 வெவ்வேறு பிரிவுகளின் கீழ், சாதனை படைத்த தொழில்முனைவோருக்கு விருதளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது இந்த அழகிய மாலை.

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் - 2018 விருதுகள் வழங்கும் விழா

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முருகப்பா குழுமத்தின் ஆலோசகரும், ஐ.ஐ.எம் கோழிக்கோடு-வின் தலைவருமான எ.வெள்ளையன் கலந்துகொண்டார்.

கலந்துரையாடல்

‘Technology as a business enabler’ என்ற தலைப்பில் ஒரு கலாந்தாய்வு நடந்தது. ``ஏழையாக வாழ்க்கையைத் தொடங்கிய பலரும் விரைவிலேயே பிசினஸ்மேனாக வளர்ந்ததற்குக் காரணம் அவர்கள் டெக்னாலஜியைத் தெரிந்துகொண்டதுதான். இனிவரும் காலங்களில் டெக்னாலஜி இல்லாத தொழிலே இருக்க முடியாது.” என்றார் Zoho நிறுவனத்தின் ராஜேந்திரன் தண்டபாணி.  

``இனி எல்லாத் தொழிலிலும் டெக்னாலஜி முக்கியத்துவம் வகிக்கும். பிசினஸ் டிஜிட்டலைஸ் மூலம் அதிக வளர்ச்சி இருக்கும். மினிமம் முதலீடு… நிறைய டெக்னாலஜிதான் தற்போது இதுதான் பிசினஸ் டெக்னிக்” என்று முடித்தார் மகேந்திரா டெக்னிகல் அகாடமியின் டீன் சங்கர்.  “டெக்னாலாஜியால் வேலைவாய்ப்பை இழப்பதைவிட புதிய வேலைவாய்ப்புகளைத்தான் உருவாக்கும்” தன் கருத்துகளை எடுத்துவைத்தார் L&T Technology services தொழில்நுட்பத் தலைவர் பொன்மணிவண்ணன். பிசினஸில் டெக்னாலஜியின் தாக்கம் தொடர்பான விருந்தினர்களின் கேள்விகளுக்கும் தங்கள் அனுபவத்திலிருந்து பதில்களைப் பகிர்ந்துகொண்டார்கள் மூவரும்.

 


[X] Close

[X] Close