வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:44 (10/12/2018)

OX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்!

உலகளவில் வாகனங்களுக்கான இன்ஜின் ஆயிலுக்குப் பெயர் பெற்ற ஷெல் நிறுவனம், சமீபத்தில் 'Make the Future India' எனும் 4 நாள் கருத்தரங்கை, சென்னையில் இருக்கும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நடத்தியது. இதில் சர்வதேச புகழ்பெற்ற Gordon Murray Design (GMD) நிறுவனம் வடிவமைத்த OX எனும் Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது ஷெல். GMD-ன் ஸ்பெஷலான iStream தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் OX, 1,900 கிலோ எடையைச் சுமக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் இருக்கும் கமர்ஷியல் பிக்-அப் வாகனங்களைவிட இருமடங்கு அதிகம்!

 

ஷெல்

 

13 பேர் உட்காருவதற்கான இடம், மருத்துவ தேவைகள், கட்டுமானம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருள்கள் என ஒருவரின் தொழில் தொடர்பான தினசரி பயன்பாடுக்கு ஏற்றபடி OX டிரக்கின் Flat Pack கான்செப்ட்டை, தொழில் அதிபரான சர் Torquil Norman முன்மொழிந்திருக்கிறார். இதை அதற்கேற்றபடி அசத்தலாக டிசைன் செய்திருக்கிறார், மெக்லாரன் F1 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களை வடிவமைத்த ஆட்டோமொபைல் இன்ஜினீயர் மற்றும் ஆசிரியரான Gordon Murray. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கிராமப்புறங்களுக்கு, குறைவான விலையில் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கு ஏதுவாக OX Flat Pack டிரக் இருக்கும் என்கிறது ஷெல்.

 

ஷெல்

 

ஷெல் மற்றும் Gordon Murray Design கூட்டணி, Global Vehicle Trust நிறுவனத்துடன் இணைந்து, இந்த OX டிரக்கைத் தயாரித்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த வாகனத்தின் Flat Pack பாணியிலான டிசைனின் சிறப்பம்சம் என்னவென்றால், உதிரிபாகங்களைக் கொண்டு 12 மணிநேரத்திலேயே இந்த டிரக்கை அசெம்பிள் செய்துவிடமுடியும். இதனால் குறைவான நேரத்தில் அதிக வாகனங்களைத் தேவைக்கேற்ப தயாரித்து, டிமாண்ட் இருக்கும் இடங்களுக்கு உதிரிபாகங்களாகவோ முழு வாகனமாகவோ அனுப்பிவிடலாம்!  தனது வகையிலே சுலபமான உற்பத்தி, குறைவான உதிரிபாகங்கள், எளிதான பராமரிப்பு, குறைந்த எடை காரணமாக அதிக பே-லோடு போன்ற பல ப்ளஸ்களை OX கொண்டிருப்பதாக ஷெல் கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க