Published:Updated:

சரப்ஜித் சிங்கை காப்பாற்ற ரூ. 25 கோடி கேட்டனர்: சகோதரி தல்பிர் கவுர் 'திடுக்' தகவல்

சரப்ஜித் சிங்கை காப்பாற்ற ரூ. 25 கோடி கேட்டனர்: சகோதரி தல்பிர் கவுர் 'திடுக்' தகவல்
சரப்ஜித் சிங்கை காப்பாற்ற ரூ. 25 கோடி கேட்டனர்: சகோதரி தல்பிர் கவுர் 'திடுக்' தகவல்
சரப்ஜித் சிங்கை காப்பாற்ற ரூ. 25 கோடி கேட்டனர்: சகோதரி தல்பிர் கவுர் 'திடுக்' தகவல்

புதுடெல்லி: சரப்ஜித் சிங்கை காப்பாற்ற பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த அன்சார் பர்னி என்பவர் ரூ. 25 கோடி கேட்டதாக அவரது சகோதரி தல்பிர் கவுர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:

பாகிஸ்தான் எனது சகோதரை கொன்றுவிட்டது.சரப்ஜித் சிங் சிறையிலிருக்கும்போது அவரை விடுதலை செய்ய உதவ வேண்டுமானால் ரூ, 25 கோடி கொடுங்கள் எனக் கேட்டார் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த அன்சார் பர்னி என்பவர்.

அவர் கேட்டபடி நான் 25 கோடி ரூபாய் கொடுத்திருந்தால் சரப்ஜித் சிங் இந்தியா திரும்பியிருப்பார்.நான் ஏழை.அவ்வளவு பணத்தை என்னால் கொடுக்க இயலாது. கடைசியில் 2 கோடி ரூபாயாவது கொடுக்குமாறு அன்சார் பர்னி கேட்டார். நான் காலையில் பணம் கொடுத்தால், மாலையிலேயே சரப்ஜித் சிங் விடுவிக்கப்பட்டுவிடுவார் என அவர் கூறினார்.

##~~##
 சரப்ஜித்தைச் சந்திக்க முயன்றபோது, எங்களிடம் எதையோ மறைத்தார்கள். எங்களிடம் அவர்கள் எதையோ மறைத்தார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். சரப்ஜித் சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம், அவர் ஓர் இந்தியர் என்பதாலேயே சுமத்தப்பட்டவை. அப்பாவியான அவரை தன் அரசியல் சதிக்கு பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது.
என்னால் சரப்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர் மகள்களுக்கு அவர்கள் பெற வேண்டிய மகிழ்ச்சியை என்னால் மீட்டுத் தர இயலவில்லை.பாகிஸ்தான் முன்னர் வாஜ்பாயின் முதுகில் குத்தியது. இப்போது மன்மோகன் சிங் முதுகில் குத்தியுள்ளது.
நான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுக்கும் வேண்டுகோள், பிரதமர் மன்மோகன் சிங், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரின் பின்னால் அணிவகுத்து இந்த விவகாரத்தில் ஒற்றுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.
பாகிஸ்தானில் இருந்து வரும் மக்களுக்கு வழங்கப்படும் விசாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று சுஷில் குமார் ஷிண்டேவுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.பாகிஸ்தான் ஒரு கோழை நாடு. பாகிஸ்தானுடன் போர் தொடுக்க இது சரியான நேரம். இவ்வாறு அவர் கூறினார்.