வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/12/2018)

கடைசி தொடர்பு:13:20 (10/12/2018)

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார்!

Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது டாடா நெக்ஸான். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருந்தது. அந்த கிராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகு டாடா தனது நெக்ஸான் காரில் முன்பக்க டிரைவர் மட்டும் பாஸஞ்சர் சீட் பெல்ட் ரிமைண்டரை எல்லா வேரியன்ட்டிலும் கட்டாயமாக்கியது.

நெக்ஸான் கிராஷ் டெஸ்ட்

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. சைடு இம்பேக்ட் டெஸ்ட்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 புள்ளிகள் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இதற்கு முன்பு சைடு இம்பேக்ட் டெஸ்ட்டில் 13.56 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது.

சைடு இம்பேக்ட் டெஸ்ட்

டாடா நெக்ஸானின் X1 பிளாட்ஃபார்ம் இண்டிகா விஸ்டாவுக்காக (இரண்டாம் தலைமுறை இண்டிகா) உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவில் விற்பனை செய்வதற்காக ஐரோப்பிய தரக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டது இந்த பிளாட்ஃபார்ம். அமெரிக்கா, ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் அதிக புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இண்டிகாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

கிராஷ் டெஸ்ட்டில் ஒரு கார் பாஸ் ஆவதற்கு எத்தனை ஸ்டார் வேண்டும் தெரியுமா?