வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:46 (11/12/2018)

நிஸான் கிக்ஸ் காரின் கேபின் எப்படி? வெளியானது படங்கள்!

இந்தியாவுக்கான தனது புத்தாண்டு பரிசாக, கிக்ஸ் காரைக் களமிறக்க உள்ளது நிஸான். வருகின்ற டிசம்பர் 14, 2018 முதலாக இதன் புக்கிங் தொடங்கவிருக்கும் நிலையில், காரின் கேபின் படங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் கிக்ஸ் காரின் இன்டீரியரில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? இந்திய கிக்ஸ் காரின் வெளிப்புற டிசைன் சர்வதேச மாடலைப் போலவே அமைந்திருந்தாலும், ப்ளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களில் பலத்த வித்தியாசம் இருந்தது; உட்புற வடிவமைப்பிலும் கணிசமான மாறுதல் இருக்கிறது.

 

நிஸான்


 
ப்ரவுன் - கறுப்பு நிற டூயல் டோன் கேபினில், டேஷ்போர்டு மற்றும் டோர் பேடுகளில் லெதர் வேலைப்பாடுகள் இருப்பது க்ளாஸ். பக்கவாட்டு ஏசி வென்ட்கள் வட்டமாக இருப்பதுடன், அவற்றுக்கு சில்வர் ஃப்னிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோலில் இருக்கும் செவ்வக வடிவ ஏசி வென்ட்களுக்கு நடுவே, 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனையாகும் Altima செடான் காரில் இருக்கும் அதே இன்ஃபோ- டெயின்மென்ட் சிஸ்டமான  இது, 360 டிகிரி Surround View கேமராவுக்கான டிஸ்பிளேவாகவும் செயல்படும். ஸ்டீயரிங் வீல் மற்றும் சீட்களுக்கு லெதர் கவர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதவு கைப்பிடிகள் சில்வர் ஃப்னிஷுடன் தகதகவென இருக்கின்றன. 

 

கிக்ஸ்

 

டச் ஸ்க்ரீனுக்குக் கீழே கிளைமேட் கன்ட்ரோல் அமைப்பு இருந்தால், அதற்கும் கீழே USB போர்ட் மற்றும் சார்ஜிங் பாயின்ட் உள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் டேக்கோமீட்டர் மற்றும் ஃப்யூல் கேஜ் அனலாக் ஸ்டைலில் இருந்தால், இவை இரண்டுக்கும் நடுவே ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் இருப்பது செம. டிரைவர் சீட்டை 6 விதமாக அட்ஜஸ்ட் செய்யமுடியும் என்பதுடன், ஆர்ம் ரெஸ்ட் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். இன்ஃபோ-டெயின்மென்ட் ஸ்க்ரீனுக்குக் கீழே சென்ட்ரல் லாக்கிங் பட்டன் உள்ளது. மற்றபடி 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், Eco மோடு, Hill Start Assist, Cornering வசதியுடன் கூடிய பனி விளக்குகள், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் போன்ற பல வசதிகள் காரில் இருக்கிறது. 

 

Nissan Kicks

 

கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் கிக்ஸ் தயாரிக்கப்படுவதால், சில பல விஷயங்கள் இரண்டுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றன. கேபினில் முன்பக்க இருக்கைகள் & ஆர்ம்ரெஸ்ட், ஸ்டீயரிங் வீலின் ஃபோன் கன்ட்ரோல், பவர் விண்டோ ஸ்விட்ச் கள், க்ரூஸ் கன்ட்ரோல் பட்டன் மற்றும் இண்டிகேட்டர் கன்ட்ரோல் லீவர் ஆகியவை இதற்கான உதாரணம். ஆனால், ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கொஞ்சம் வித்தியாசப்படுகின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன், 5 ஸ்பீடு/6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன், 215/60 R17 டயர்கள் என மெக்கானிக்கலாகவும் ஒற்றுமை உண்டு. 9.5 - 15 லட்ச ரூபாயில் வெளிவரவுள்ள கிக்ஸ், நிஸானுக்கு இங்கே சந்தை மதிப்பைப் பெற்றுத் தரலாம். 

 

Renault Kaptur

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க