டியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு? - டாடா நிறுவனம் அறிவிப்பு | Tata Motors Launches Tiago XZ+, to Rival Hyundai Santro Asta (O)

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (12/12/2018)

கடைசி தொடர்பு:08:41 (12/12/2018)

டியாகோ XZ+ காரின் விலை எவ்வளவு? - டாடா நிறுவனம் அறிவிப்பு

ஹூண்டாய் சான்ட்ரோவுக்குப் போட்டியாக இருக்கும் தனது டியாகோ காரில், புதிதாக XZ+ எனும் டாப் வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இதில் எதிர்பார்த்தபடியே கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் Canyon Orange, Ocean Blue எனும் 2 புதிய கலர்கள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் ரூஃப்பிற்கு Gloss Black Wrap ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், டிகோர் காரின் டாப் பெட்ரோல் மாடலில் இருக்கும் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இங்கும் உள்ளன. இதனுடன் டெயில்கேட்டில் க்ரோம் பட்டை மற்றும் கதவுகளின் அடிப்பகுதியில் கறுப்பு நிற Moulding ஆகியவை இங்கே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  

 

டியாகோ

 

கேபினைப் பொறுத்தவரை, டிகோரில் இருந்த Harman நிறுவனத்தின் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இங்கும் தொடர்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வாய்ஸ் கமாண்ட் இருந்தாலும், ஆப்பிள் கார் ப்ளே மிஸ்ஸிங்; அதேபோல ரியர் பார்க்கிங் சென்சார் இருப்பதால், ரிவர்ஸ் கேமரா கிடையாது. ஆனால் Power Folding மிரர்கள், Full Fabric சீட்கள், Knitted ரூஃப் லைனர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி ஆகியவை XZ+ வேரியன்ட்டில் ஸ்டாண்டர்டாக இருப்பது ப்ளஸ். மற்றபடி டிரைவிங் மோடுகளுடன் கூடிய பெட்ரோல்/டீசல் 3 சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாறுதல் இல்லை. இந்த டியாகோ XZ+ 5.57-6.31 லட்சத்துக்கு கிடைக்கும். Gloss Black Wrap-க்கு, கூடுதலாக 7,000 ரூபாய் கொடுக்க வேண்டும். 

 

டாடா

 

படங்கள்: புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான அர்ஜூன். 

 

Tata Motors

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க