வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:45 (13/12/2018)

புதிய காம்பேக்ட் எஸ்யூவி பெயர்? - சஸ்பென்ஸ் வைக்கும் மஹிந்திரா

மோனோகாக் சேஸி கொண்ட காம்பேக்ட் எஸ்யூவிக்களின் கோதாவில் லேட்டாகக் கால்வைத்தாலும், லேட்டஸ்ட் வசதிகளில் S201 சொல்லியடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்!

S201 எனும் குறியிட்டு எண்ணைக் கொண்ட தனது காம்பேக்ட் எஸ்யூவியின் டெஸ்ட்டிங் பணிகள் நிறைவுற்றிருப்பதால், அதை விற்பனைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது மஹிந்திரா. கடந்த மாதத்தின் இறுதியில், இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எஸ்யூவியான ஆல்ட்டுராஸ் அறிமுகமான நிலையில், டிசம்பர் 1 அன்று இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வருகின்ற டிசம்பர் 19, 2018 அன்று இதன் சந்தைப் பெயர் வெளிவரும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

 

மஹிந்திரா

 

மோனோகாக் சேஸியைக் கொண்டிருக்கும் XUV 5OO பிராண்டுக்கு இருக்கும் மதிப்பை வைத்துப் பார்க்கும்போது, அதே பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி - XUV 3OO எனும் அடையாளத்தைப் பெறும் என நம்பப்படுகிறது. மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் அளவில் போட்டியிட்டாலும், ஒட்டுமொத்த பேக்கேஜாக இது ஹூண்டாய் க்ரெட்டாவுக்குச் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் ஸாங்யாங் டிவோலியின் ஃப்ளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டே S201 தயாரிக்கப்பட்டிருக்கிறது! தரமான கேபின் கன்ஃபார்ம். 

 

காம்பேக்ட் எஸ்யூவி

 

மோனோகாக் சேஸி கொண்ட காம்பேக்ட் எஸ்யூவிக்களின் கோதாவில் லேட்டாகக் கால்வைத்தாலும், லேட்டஸ்ட் வசதிகளில் S201 சொல்லியடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்; அதற்கேற்ப பனரோமிக் சன் ரூஃப், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், 17 இன்ச் அலாய் வீல்கள் போன்ற பிரிமியம் வசதிகளுடன், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL & டெயில் லைட், புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்றவை தொடர்கின்றன. செப்டம்பரின் தொடக்கத்தில் வெளிவந்த மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள், S201 காம்பேக்ட் எஸ்யூவியில் இடம்பெற உள்ளன. இரண்டுக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கலாம். 

 

Mahindra S201

 

4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், 7 காற்றுப்பைகள் போன்றவை டாப் வேரியன்ட்களில் இருக்கும் என்றாலும், அனைத்து வேரியன்ட்டிலும் ABS, ESP, ரியர் பார்க்கிங் சென்சார், 2 காற்றுப்பைகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பின்னாளில் தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் பொருத்தப்படலாம். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் களமிறங்க இருக்கும் S201, போட்டியாளர்களுக்குக் கடும் சவால் அளிக்கும் எனலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க