Published:Updated:

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 
ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

இந்த இதழ் ஆனந்த விகடன்... படிக்க: https://bit.ly/2QLxfcZ

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 
ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

``பலகீனமான சூழலில் கூட்டணியை உதாசீனப்படுத்தி, நிறைய தொகுதிகளில் போட்டியிட்டுக் கவிழ்வார்கள். தனித்தே வலுவாக இருக்கும்போது மெகாகூட்டணி அமைத்து, குறைந்த இடங்களில் போட்டியிட்டு சீட்டுகளைத் தாரை வார்ப்பார்கள்" என்று சொல்வார்கள். தி.மு.க-வின் கடந்தகாலக் கூட்டணி வரலாறுகள், இதை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆனால், ``இம்முறை தி.மு.க கனகச்சிதமாகக் காய்நகர்த்துகிறது..." - வி.சி.க, ம.தி.மு.க-வுடன் கூட்டணி குழப்பம், பா.ம.க-வை சேர்க்க அச்சம், பா.ஜ.க விரித்த வலை, காங்கிரஸ் போக்கு ஆகியவற்றுடன் ஸ்டாலின் முதன்முதலில் `எஸ்டாபிளிஷ்’ ஆகும் தேர்தல் இது. இந்தச் சூழலில் தி.மு.க-வின் 'மூவ்'களையும், ஸ்டாலினின் அணுகுமுறைகளையும் கச்சிதமாக முன்வைக்கிறது 'உள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா!' எனும் அரசியல் அலசல்.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

கருணாநிதி இறந்தபிறகு ‘கலைஞருக்குப் புகழாஞ்சலி’ கூட்டங்களை நடத்தியது தி.மு.க. கருணாநிதியின் சிலையைத் திறக்க அகில இந்தியத் தலைவர்களை அழைக்கிறார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு இரங்கல் கூட்டம் ஒன்றையாவது அ.தி.மு.க. நடத்தியதா? ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு மோடியை அழைத்து வர முடிந்ததா?

...கட்டாயப் பச்சை குத்துவதை விரும்பாத ஜெயலலிதாவுக்கு இப்போது நடந்திருப்பது ‘பச்சைத் துரோகம்.’ தேர்தல் கமிஷன், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. என அனைத்துக்கும் அச்சப்பட்டு, அடிபணிந்து கிடக்கிறது அ.தி.மு.க. அரசாங்கத்தின் ‘அதிகார முட்டை’ அம்மிக் கல்லைச் சுக்குநூறாக்கும். ஆளுமை இல்லாத அ.தி.மு.க-வை மட்டும் அது விட்டு வைக்குமா? - ஆட்சியும் அவலங்களும்... ஜெ. இல்லாத இரண்டு ஆண்டுகள்!' என்ற அரசியல் பார்வைக் கட்டுரை சம்பந்தப்பட்டவர்களை நிச்சயம் தெறிக்கவிடும்.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

1991 முதல் தற்போது வரையில் காவிரி வழக்கு தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். இவர்களுக்குக் குறைந்த பட்சம் 3,450 ரூபாய் முதல் அதிகபட்சம் 9.74 கோடி ரூபாய் வரையில் வழக்கறிஞர் கட்டணமாகத் தரப்பட்டிருக்கிறது. இதுபற்றிய ஒரு முழுமையான தகவல் தொகுப்பைத் தருகிறது, `விகடன் லென்ஸ் - காவிரிக் கட்டணம் 41 கோடி!' எனும் டேட்டா ஜர்னலிஸம்.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

``சோசியல் மீடியா ட்ரோல்களை எப்படி எடுத்துக்குவீங்க?”

``சிலருக்கு நானும் காமெடியா ரிப்ளை பண்ணுவேன். அவங்க என் ஹியூமர் சென்ஸுக்குத் தீனி போடுறாங்கனுதான் சொல்லணும். நான் யாருனு அவங்களுக்குத் தெரியும். அவங்க யாருனு எனக்குத் தெரியாது. தெரியாத ஒருத்தருக்காக வருத்தப்படத் தேவையில்லை. நல்ல கமென்ட்ஸுக்கு ரியாக்ட் பண்ணலாம், அவங்க அறிவுரைகளை ஏத்துக்கலாம். கலாய்க்கிறவங்களுக்குப் பதிலடி கொடுத்துக்கிட்டே இருந்தா, எனக்கு வேலை இல்லைனு நினைச்சுப்பாங்க.”

- ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 என ஏறுமுகத்தில் இருக்கும்போதே பாலிவுட்டுக்கு ஃப்ளைட் பிடித்தவர் டாப்ஸி. `பேபி’, `பிங்க்’, `காஸி’ என  ஹிட்டுகள் கொடுத்து டாப்புக்குச் சென்றவரின் ``சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை!” எனும் பேட்டி டாப்ஸி குறித்த அப்டேட்ஸ்களை அள்ளித் தருகிறது. 

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

``ஷங்கர் ஒரு கதையைச் சொன்னா, அதைப் பத்து மடங்கு பிரமாண்டமா காட்ட என்ன பண்ணலாம்னு யோசிப்பேன். ‘2.0’ படத்துல ஒரு குருவிக்குஞ்சு மரத்துல இருந்து அக்‌ஷய் குமார் கையில விழும். இந்தக் காட்சிக்கு சவுண்டு டிசைன் பண்றதுதான் ரொம்ப சவாலா இருந்தது. ஏன்னா, அந்தக் காட்சியில குருவியோட கடைசி மூச்சு வேணும்னு ஷங்கர் சொன்னார். சவுண்டு மிக்ஸிங்ல அந்தக் காட்சியைப் பார்த்து, கலங்கிட்டார் ஷங்கர். படத்துல இடம்பெற்ற நெகிழ்ச்சியான காட்சி இது." - ‘2.0’ மூலம் 4-டி ஒலி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ரசூல் பூக்குட்டியின் 'சர்வம் சவுண்டு மயம்!' சிறப்புப் பேட்டியில் ஆயிரக்கணக்கான செல்போன்கள் ஒரே நேரத்தில் வைப்ரேட் ஆகிற காட்சி முதல் ரஜினி, அக்‌ஷய் வரை பல சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துள்ளார். 

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

இந்த இதழ் ஆனந்த விகடன்... படிக்க: https://bit.ly/2QLxfcZ

``...தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் அருந்ததிய சமூகத்துப் பையனும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்துள்ளார்கள். இது அவர்கள் வீட்டுக்குத் தெரிந்து பையனைக் கடுமையாக மிரட்டியுள்ளனர். அப்போது இந்தத் தகவல் எங்கள் கவனத்துக்கு வந்து, சில அமைப்புத் தோழர்கள் துணையோடு அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தோம். இதற்காக நாங்கள்  கடுமையாக மிரட்டப்பட்டோம். கொலை செய்துவிடுவோம் என்றார்கள்...”

- இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்திருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் குறித்து நமக்கு அறிமுகம் தருகிறது ``சாதிச் சமூகமே சிறைதான்!” எனும் அவரது நேர்காணலை ஒட்டிய சிறப்புக் கட்டுரை. 31 வயதே ஆன அவர், கடந்த சில வருடங்களாக ஆணவப்படுகொலை, நீட், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

கடந்தவாரம் சந்திப்பின்போது, ``தமிழ்நாட்டுல பத்தாயிரம் நெல் ரகங்கள் இருந்துச்சு. எல்லா ரகங்களையும் அமெரிக்காவுல இருக்கிற சில தனியார் நிறுவனங்கள் கொண்டு போய் சேமிச்சு வச்சுட்டாங்க. எதிர்காலத்துல, பேடன்ட் வாங்கிட்டு நம்மகிட்டையே விப்பாங்க. அதையெல்லாம் மீட்கணுன்னா பெரிய பெரிய நிறுவனங்களோட போராடணும். நிறைய பேர் வரணும்” என்றார் ஜெயராமன். 

- இயற்கை தன்னில் கரைத்துக்கொண்ட‘நெல்’ ஜெயராமன் நிகழ்த்திய அசாத்தியங்களையும், விட்டுச்சென்ற பயணத்தையும் பகிர்கிறது `காற்றில் கலந்த விதைநெல்' எனும் அஞ்சலிக் குறிப்புகள். 

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

``வேள்பாரியில் உங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்த கதாபாத்திரம் எது, ஏன்?” 

``திசைவேழர். வானியல் பேராசான். சங்க காலத்து வானியல் முறைகளைப்பற்றித் தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே அக்கதாபாத்திரத்தை வலிமையோடு உருவாக்க முடியும். சங்க காலத்தில் தமிழகத்துக்கும் செங்கடல் பகுதிக்கும் இடையில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கடல்வணிகத்துக்கு அடிப்படையாக இருந்தது வானியல் அறிவு. ஆனால், அது பற்றி நம்மிடம் இருக்கும் குறிப்புகளும் ஆய்வுகளும் மிகமிகக் குறைவே. அந்த வானியல் அறிவை ஓரளவாவது புரிந்துகொள்ளவில்லையென்றால் இக்கதாபாத்திரத்தை வார்த்தெடுக்க முடியாது...”

- வேள்பாரி தொடர் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து இப்புதினம் குறித்த வாசகர்களின் கேள்விக்கு, வேள்பாரியின் முடிவு முதல் `கள்' வகைகள் வரை `வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்' சிறப்புப் பகுதியில் பதில்களைத் தெளித்திருக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்!

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

``நீங்கள் எழுத்தை மட்டுமே நம்பி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அந்த முடிவு சரிதான் என்ற நம்பிக்கையை இந்த விருது உங்களுக்குக் கொடுத்துள்ளதா?”

``எல்லாத் தொழிலிலும் இருக்கும் இடர்கள் எழுத்துத் தொழிலிலும் இருக்கின்றன. அப்படி எடுத்த முடிவுதான் எனக்கு யாரும் என்னுடைய காலண்டரில் சிவப்புக் கோடு போட முடியாதபடிக்கு என்னுடைய விடுமுறையை நான் தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தச் சுதந்திரம் எனக்கு எழுதுவதற்கான பெரிய மனநிலையைக் கொடுத்தது. ஆனால், பொருளாதார ரீதியாக  ஒருவரைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. அதனால் ஏராளமான அவமானங்களைச் சந்தித்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி எழுத வேண்டுமா என்றால் ஆம் அப்படித்தான் எழுத வேண்டும். ஏனென்றால்..." 

- சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ``நல்ல எழுத்தாளன் கௌரவிக்கப்பட வேண்டும்!”
எனும் அவருடனான உரையாடலில் அவர் பகிர்ந்தவை ஒவ்வொன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

’Can you Twerk?’ (ட்வெர்க் - உடலின் பின்பக்கத்தை வளைத்துச் சற்று கவர்ச்சியாக ஆடப்படுவது.)

இப்படியொரு கேள்வியை இதற்கு முன் விருது வாங்கிய யாரிடமும் கேட்டதில்லை. ஆடாவிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வி?  இந்தக் கேள்விக்காக மொத்த உலகமும் கொந்தளித்தது. ‘விளையாட்டுத்துறையில் காட்டப்படும் அர்த்தமற்ற பாலியல் பாகுபாடுகளுக்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு’ என்று கடுமையாகச் சாடினார் ஆண்டி முர்ரே. அந்த விருது விழா முடிந்து இரண்டு நாள்களுக்கு அதுதான் சமூக வலைதளங்களின் வைரல் விஷயமாக இருந்தது. ஆனால், ஆடா கொதிக்கவில்லை. அவர் கோபம் கொள்ளவில்லை. 23 வயதேயான ஆடா மிகப் பக்குவமாக அதை எதிர்கொண்டார்...

- பேலன் டி ஓர் (Ballon d’or) - கால்பந்தாட்ட உலகின் ஆகப்பெரிய விருது. ஜிடேன், மெஸ்ஸி, ரொனால்டோ என ஜாம்பவான்களின் கைகளில் தவழ்ந்த விருதுப் பட்டியலில் முதல்முறையாக ஒரு பெண் பெயர் சேர்ந்திருக்கிறது. நார்வேயைச் சேர்ந்த ஆடா ஹெகர்பெர்க் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளார். அவரது அசாத்திய பயணத்தை நம் கண்முன் விரிக்கிறது 'ஆடா பராக்..!' எனும் ஆர்ட்டிகிள்.

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

...மறுநாள் சாப்பாட்டை வைத்தவர். ஊட்டி முடித்துவிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு முந்தியில் முடிந்து வைத்திருந்த, வியர்வையில் நைந்துபோன சிகரெட்டை எடுத்து மெஸ்ஸியிடம் கொடுத்தார். கல்யாணத்துக்குப் போய் வந்தால் இப்படித்தான் முந்தியில் மைசூர்ப்பாகை முடிந்து வைத்து மெஸ்ஸிக்குத் தின்னத்தருவார். ஏனோ, அது நினைவுக்கு வர முந்தியால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். அம்மா காவல் புரிய மெஸ்ஸி பயந்தபடியே சிகரெட்டை இழுத்து விட்டான். பிள்ளைக்கு சந்தோஷம் தரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதைச் செய்துகொடுப்பது அம்மாக்களால்தான் முடியும்போல. நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன... 

- குடியெனும் நோயிலிருந்து வெளியேற அன்பெனும் ஒற்றைச்சொல் போதுமானதாக இருக்கிறது. ஆனால், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை ஓர் ஏழைத் தாயின் பேரன்பைக் காட்டும் உண்மைக் கதையை நம்மிடம் பதித்திருக்கிறது, `நான்காம் சுவர்' அத்தியாயம்!

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

...படத்தை கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் அழைத்து, ப்ரிவியூ ஷோ ஒன்றுக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், யார் சொன்னாலும், படத்தின் க்ளைமாக்ஸை மாற்றக்கூடாது என்பது என் எண்ணம். படத்தைப் பார்த்த முதியவர்கள், நடுத்தர வயதினர் அனைவரும், `ரஜினியை சாகடிக்கக் கூடாது’ என்றார்கள். கல்லூரி மாணவர்கள் என் முடிவை ஏற்றுக்கொண்டு, ‘அதுதான் சரி’ என்றார்கள். அப்படி ஒரு க்ளைமாக்ஸ்தான், ரஜினி ஹீரோவாக நடிக்க அச்சாரம் போட்டது...

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பகிரும் 'தன்மானம் அவமானம் வெகுமானம்' பழைய கோடம்பாக்கத்துக்கு அப்படியே இழுத்துச் செல்கிறது. 

ஸ்டாலின் மங்காத்தா to ஆடா பராக்! - 5 நிமிட வாசிப்பில் ஆனந்த விகடனின் 13 அசத்தல்கள்! 

பாலிசி பஸார் ஆரம்பித்த முதல் ஆறு ஆண்டுகள் யாஷிஷின் சம்பளம் அவர் மகன்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டக்கூடப் போதவில்லை... அவர்கள் படிப்பது யு.கே-வில். குடும்பத்தை அங்கே விட்டுவிட்டு பாலிசி பஸாருக்காக இங்கே தனியே இருந்து வேலை செய்கிறார் யாஷிஷ். இன்று பாலிசி பஸாரில் மாதந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்கப்படுகின்றன. இதற்காக 5000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதன் தலைமைச் செயல் அதிகாரி யாஷிஷ் தாஹியா... - ஸ்டார்ட் அப்களின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்வது குறித்து நமக்கு பாடம் கற்பிக்கிறது 'கேம் சேஞ்சர்ஸ் - POLICY BAZAAR.COM' பகுதி.

இவற்றுடன், இந்திரா செளந்தர்ராஜனின் 'இலையுதிர் காலம்', அமைதி நோக்கிய 'அன்பே தவம்' தொடர், மோடியைத் தெறிக்கவிடும் கார்ட்டூன், கரைக்கும் கவிதைகள், சிறுகதை, ஜோக்குகள், துணுக்குகள், வலைபாயுதே கலெக்‌ஷன்ஸ் என புரட்டப் புரட்ட புத்துணர்வு ததும்பும் இந்த வார ஆனந்த விகடன் - மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த வார ஆனந்த விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2RUYUW1