வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (13/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (13/12/2018)

டாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாயின் மற்றொரு மாடல்!

ந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதியின் செலெரியோ மடலை பின்னுக்குத்தள்ளி ஹூண்டாய் சான்ட்ரோ மாடல் கார் முன்னிலைக்கு வந்துள்ளது. 

ஹூண்டாய் 

இந்தியாவில் அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நவம்பர் மாதத்தில் கார் விற்பனையானது குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் 2,81,066 கார்கள் விற்பனையான நிலையில், நவம்பர் மாதத்தில் 2,63,455 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதியின் மாடல்களில் 7 மாடல்கள் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 கார்களின் பட்டியலில் இருந்துள்ளன. ஆனால், நவம்பர் மாத விற்பனையில் 6 மாடல்கள் மட்டுமே வந்துள்ளன. நான்கு இடங்களை ஹூண்டாய் மாடல் பிடித்துள்ளது. அதேபோல், அக்டோபர் மாதம் 22,180 கார்களை விற்பனை செய்து முன்னிலையில் இருந்த மாருதியின் ஆல்ட்டோ மாடல் நவம்பர் மாதம் 3,537 கார்கள் குறைவாக விற்பனை செய்து டாப் 10 பட்டியலில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

கார்கள்

அக்டோபர் மாதத்தில் 8,535 கார்கள் மட்டுமே விற்பனையான சான்ட்ரோ மாடலில் நவம்பர் மாதத்தில் 9,009 கார்கள் விற்பனையாகியுள்ளன. சான்ட்ரோ மாடல் விற்பனை அதிகரித்திருந்தாலும் க்ரெட்டா மாடலில் விற்பனை குறைந்துள்ளது. 11,702 கார்களில் இருந்து 9,677 கார்களாக விற்பனை குறைந்துள்ளது.

இந்தியாவில் தீபாவளிப் பண்டிகையையொட்டி அக்டோபர் மாதத்தில் அனைத்து கார் மாடல்களிலும்  விற்பனையானது இருமடங்காக அதிகரித்திருந்த நிலையில், நவம்பரில் இந்த விற்பனை குறைந்துள்ளது. நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் 6 இடங்களில் மாருதியும், 4 இடங்களில் ஹூண்டாயும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!

மாடல் யூனிட்
மாருதி ஸ்விஃப்ட் 22,191
மாருதி டிசையர் 21,037
மாருதி பெலினோ 18,649
மாருதி ஆல்ட்டோ 18,643
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,378
மாருதி வேகன்-ஆர் 11,311
ஹூண்டாய்  எலீட் i20   10,555
ஹூண்டாய் க்ரெட்டா 9,677
ஹூண்டாய் கிராண்ட் i10 9,252
ஹூண்டாய் சான்ட்ரோ 9,009

நீங்க எப்படி பீல் பண்றீங்க