Published:Updated:

வாட்ஸ்அப்பில் வருங்கால மனைவியை `முட்டாள்' என்ற நபர்... 60 நாள்கள் ஜெயிலுக்குப் போன பரிதாபம்!

வாட்ஸ்அப்பில் வருங்கால மனைவியை `முட்டாள்' என்ற நபர்... 60 நாள்கள் ஜெயிலுக்குப் போன பரிதாபம்!
வாட்ஸ்அப்பில் வருங்கால மனைவியை `முட்டாள்' என்ற நபர்... 60 நாள்கள் ஜெயிலுக்குப் போன பரிதாபம்!

தன்னுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ் ஒன்றால் ஜெயிலுக்குச் சென்றிருக்கிறார் ஒரு நபர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது அபுதாபியில். பெயர் வெளியிடப்படாத அந்த நபர் அவரின் வருங்கால மனைவிக்கு வாட்ஸ்அப்பில் habla என்று விளையாட்டாக அனுப்பியிருக்கிறார். இதற்கு அரபு மொழியில் முட்டாள் என்று அர்த்தம். அதைப் பார்த்துவிட்டுக் கோபமடைந்த அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுப்பியவருக்கு 20,000 திர்ஹம் அபராதமும், 60 நாள்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை கலீஜ் டைம்ஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. 20,000 திர்ஹம் என்பது இந்திய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய்க்குச் சமம். 'முட்டாள்' என்று நகைச்சுவையாகவே அனுப்பினேன் என்று அவர் தெரிவித்தாலும், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

அதன் பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'மனதை புண்படுத்தும் வார்த்தைகளைச் சமூக வலைதளங்களில் பகிர்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், இது சைபர் கிரைமாகக் கருதப்படும். எனவே, இதுபோன்று அனுப்பியவர்களுக்குச் சிறைத் தண்டனைக் கிடைக்கவோ அல்லது 250,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படவோ வாய்ப்புள்ளது' என்ற தகவலையும் குறிப்பிட்டிருக்கிறது கலீஜ் டைம்ஸ்.