Published:Updated:

டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!

டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!
டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் டுனீசியா போரின் வெற்றி சின்னமாய் இருக்கும் மணிக்கூண்டு, 75 வயதில் பவள விழா கொண்டாட வேண்டிய நேரத்தில் பொலிவிழந்து, பழுதடைந்துபோனது. அதற்கு ரஜினி மக்கள் மன்றம் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள்.

உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார். 1943 நவம்பர் 29-ம் தேதி, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் ஹோப் மணிக்கூண்டை திறந்து வைத்தார்.

டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!

75 ஆண்டுகளாக மயிலாடுதுறையின் அடையாளமாக இருந்து வந்த மணிக்கூண்டு, நேரம்கூட காட்ட முடியாத நிலையில் பல மாதங்ககளாகப் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடினர். ஆதரவற்றோருக்கும் அன்பகம் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கினர்.

டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!

பின்னர், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான மெத்தை, ஆடை உள்ளிட்ட பரிசுப் பொருள்களை வழங்கி, ரத்ததானமும் செய்தனர். பல்வேறு, நலத்திட்ட உதவிகளைச் செய்துகொண்டிருந்த ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் மயிலாடுதுறையில் நீண்ட நாள்களாகப் பழுதடைந்து, பொலிவிழந்து நின்றுகொண்டிருக்கும் மணிக்கூண்டை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக, ரஜினி மக்கள் மன்றம், மயிலாடுதுறை நகராட்சியிடம் இருந்து உரிய ஒப்புதல் பெற்று மயிலாடுதுறை வர்த்தக சங்க கட்டுப்பாட்டில் இருந்த மணிக்கூண்டைத் திறந்து, பழுதுகளை  நீக்கி மணிக்கூண்டை கம்பீரமாய் காட்சியளிக்க வைத்துள்ளனர்.

டுனீசியா போர் வெற்றி சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்த மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்!

இதனால் மயிலாடுதுறை மணிக்கூண்டு மீண்டும் பொலிவோடு காட்சியளிக்க தொடங்கியுள்ளது. மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த டுனீசியா போரின் வெற்றி சின்னத்துக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள்.